நாட்டில் ஏற்பட்டு இருக்கும் அசாதாரண நிலைமையை கருதிற்கொண்டு சம்மாந்துறை வர்த்தக சம்மேளனத்தினால் சம்மாந்துறை பிரதேசத்தில் வீட்டுக்கு வீடு பாண் வழங்கும் நிகழ்ச்சித்திட்டம் 15 நாட்களாக இடம் பெற்றுக்கொண்டு இருக்கின்றது.
நேற்று (19) இன் நிகழ்வு புஸ்றாபள்ளி,கோரக்கோவில்,உதயபுரம் பிரதேசங்களில் 1000 பாண் வீட்டுட்க்கு வீடு சென்று பிரதேசங்களில் உள்ள அனைத்து மக்களுக்கும் மேலும் 1000ரூபாய் பெறுமதியான 20 பொதிகளும் கையளிக்கப்பட்டது.
இன் நிகழ்வில் சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ்.எல்.எம் ஹனீபா,சம்மாந்துறை இராணுவ முகாம் பொறுப்பதிகாரி கப்டன் நவரத்ண , சம்மாந்துறை வர்த்தக சம்மேளன உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.
சம்மாந்துறை வர்த்தக சம்மேளனம், ஊர் தனவந்தர்களின் ஆதரவுடன் இதுவரைக்கும் 6000 பாண்களை சம்மாந்துறை பிரதேச மக்களிடம் கையளித்து இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
