நோர்வூட் பிரதேச சபையின் தலைவர் கே.கே.ரவி தெரிவிப்பு
ஹட்டன் கே.சுந்தரலிங்கம் விசேட நிருபர்-ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஸ அவர்களிடம் தோட்டஉட்கட்டமைப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சர் ஆறுமுகன் தொண்;டமான் விடுத்த வேண்டுகோளுக்கமைய நுவரெலியா மாவட்டத்தில் தோட்டப்பகுதியில் வாழும் 14000 பேருக்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுத்திருப்பதாக நோர்வூட் பிரதேச சபையின் தலைவர் கே.கே.ரவி தெரிவித்தார்.
தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை காரணமாக பலர் தொழிலவாய்ப்புக்களை இழந்துள்ளனர்.அவர்களுக்கு நிவாரணங்கள் பெற்றுக்கொடுக்கும் வேலைத்திட்டத்தினை தற்போது ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய ஹட்டன் டிக்கோயா, தரவலை, பட்டல்கெலே, வனராஜா,பொகவந்தலாவை உள்ளிட்ட தோட்டங்களில் வாழும் தற்போது ஏற்பட்டுள்ள சூழ்நிலையில் வேலையிழந்து நிர்கதியான நிலையில் உள்ள முதியவர்கள், கொழும்பிலிருந்து தோட்டப்புறங்களுக்கு வந்த இளைஞர்கள் யுவதிகள் ,சமூரத்தி பயனாளிள், நோயாளர்கள், மேசன் மற்றும், நாட்கூலி, சுயதொழிலில் ஈடுபட்டவர்கள.; ஆகிய அனைவருக்கும் இந்த நிவாரணங்கள் பெற்றுக்கொடுக்க உள்ளதாகவும் தற்போது இந்த திட்டம் ஆரம்பித்த நடைபெற்று வருவதாகவும்,நோர்வூட் பிரதேச சபைக்குட்பட்ட எவ்வித வழியுமின்றி இருக்கும் அனைவருக்கும் இந்த நிவாரணம் பெற்றுக்கொடுக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.