நேற்றைய தினம் (30.03.2020) இலங்கையில் கொரோனா தொற்றினால் முஸ்லீம் ஒருவரின் மரணம் பதிவாகியிருந்த நிலையில் குறித்த நபரின் உடல் நீர்கொழும்பு பகுதியில் தகனம் செய்யப்பட்டிருந்தது. முஸ்லிம்களுடைய மத கடமைகளை அரசு கவனத்திற் கொண்டு முஸ்லிம் மரணங்கள் சம்பவிக்கின்ற பொழுது உடலை தகனம் செய்யாது மண்ணில் அடக்கம் செய்வதற்கு அரசு குறித்த நபரின் குடும்பத்திற்கு உரிமையை வழங்குமாறு ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் கேட்டுக்கொள்கிறது.
உலக சுகாதார ஸ்தாபனமும் (WHO) மரணித்தவரின் உடலை தமது மத சம்பிரதாயங்கள் படி ஒரு சில முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளுடன் எரிக்கவோ மண்ணில் அடக்கவோ வழிமுறைகளை அறிவித்துள்ள நிலையில் லண்டன், மலேஷியா, இத்தாலி, சிங்கப்பூர் போன்ற நாடுகளிலும் அரசு தத்தமது கலாச்சாரத்தை பின்பற்றி நல்லடக்கம் செய்ய வாய்ப்பளித்துள்ளது என்பதையும் இலங்கை அரசிற்கு நினைவூபடுத்துகிறோம்
எனவே இலங்கை அரசு மற்றைய நாடுகளை போன்று உலக சுகாதார ஸ்தாபனத்தின் அறிவுறுத்தலுக்கு அமைய முஸ்லிம்களின் உடல்களை தமது மத சம்பிரதாயங்களுக்கு உட்பட்டு தத்தமது பிரதேசத்தில் அடக்கம் செய்ய அனுமதிக்குமாறு அரசை ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் வேண்டிக்கொள்கின்றது.
இப்படிக்கு,
ஷிஹான் முஹம்மத்
செயலாளர்
ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத்
31.03.2020
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -