குழந்தை அத்தியாவசியமற்றது என கருதினால் அரசாங்கத்திடம் ஒப்படையுங்கள்- தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை


ஒலுவில் எம்.ஜே.எம் பாரிஸ்-
தாயொருவர் தமது குழந்தை அத்தியாவசியமற்றது என கருதும் பட்சத்தில், அந்த குழந்தையை ஒப்படைப்பதற்காக நாடு முழுவதும் 9 மத்திய நிலையங்களை ஸ்தாபிப்பதற்கு தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை தீர்மானிக்கவுள்ளது.

பிறந்தது முதல் ஒரு வயது வரையான குழந்தைகளை குறித்த மத்திய நிலையங்களில்ஒப்படைக்க முடியும் என அதிகார சபையின்தலைவர் பேராசிரியர் முதித்த விதானபத்திரன குறிப்பிட்டுள்ளார்.
கடந்த சில நாட்களில், சிசுக்கள் கொலை செய்யப்பட்டதுடன் கைவிடப்பட்ட நிலையிலும் மீட்கப்பட்டிருந்தன.
இவ்வாறான நிலைமையை குறைக்கும் வகையில், சிசுக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக புதிய வேலைத்திட்டங்களை முன்னெடுக்கவுள்ளதாகவும், குழந்தைகளை மத்திய நிலையங்களில் ஒப்படைக்கும் போது, குழந்தையின் பெற்றோரிடம் எந்த காரணங்களும் வினவப்பட மாட்டாதெனவும்

குழந்தைகள் வளர்ந்தவுடன், அவர்களை சிறுவர் நிலையங்களுக்கு அல்லது குழந்தைகளை தத்தெடுப்போருக்கு சட்டரீதியாக ஒப்படைப்பதே இந்தத் திட்டத்தின் நோக்கமெனவும் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை தெரிவித்துள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -