மட்டக்களப்பு பல்கலைக் கழகத்தில் தனிமைப்படுத்தப்பட்டோர் நோய்களின்றி குடும்பத்துடன் அனுப்பிவைப்பு



எஸ்.எம்.எம்.முர்ஷித்-

ட்டக்களப்பு மாவட்டத்தின் வாகரை பிரதேச செயலாளர் பிரிவில் புணாணை மட்டக்களப்பு பல்கலைக் கழகத்தில் கடந்த 14 நாட்களாக தடுத்து வைக்கப்பட்டு மருத்துவ கண்கானிப்பில் வைக்கப்பட்டவர்கள் எவ்விதமான நோய்த்தொற்றும் இல்லாத நிலையில் தங்களின் குடும்பங்களுடன் இணைக்கும் பணி தொடர்ந்து இடம்பெற்று வருகின்றது இதில் இன்று (30.03.2020) திங்கள் கிழமையும் இடம் பெற்றது.

இராணுவத்தினரின் பஸ் மூலமாக புணாணை மட்டக்களப்பு பல்கலைக் கழக கொரோனா தடுப்பு முகாமில் இருந்து பஸ் மூலமாகவும் தனியார் வாகனங்கள் மூலமாகவும் 58 பேர் கொழும்பு, குருநாகல், கண்டி போன்ற பிரதேசங்களுக்கு பொலிஸ் பாதுகாப்புடன் இராணுவத்தினர் அழைத்து சென்றுள்ளனர்.

இதில் கைக்குழந்தைகள், சிறுவர்கள் உட்பட பெரியோர்கள் முதல் தங்களின் குடும்பங்களுடன் இணைக்கும் முகமாக பொலிஸ் பாதுகாப்புடன் இராணுவத்தினரால் அழைத்து சென்றுள்ளனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -