கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணாமாக அமுல்படுத்தப்பட்டிருந்த ஊரடங்குச் சட்டம் நேற்று (30) தளர்த்தப்பட்டதன் பின்னர் கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதிகளின் நிலை சுமூகமாகக் காணப்பட்டது.
குறித்த பகுதியில் மக்கள் பாதுகாப்புக்காக வேண்டி ஏராளாமான இராணுவத்தினர்களும், பொலிஸாரும், பொதுச் சுகாதார பரிசோதகர்களும் இன்று கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.
அத்தோடு மக்களும் முகக் கவசங்கள், கையுறைகள் அணிந்து விழிப்போடு நடந்து கொண்டு பாதுகாப்புப் படையினர்களுக்கு ஒத்துழைப்புக்களை வழங்கியதை காணமுடிந்தது.
குறித்த பகுதிகளில் இன்று ஏராளமான மரக்கறி விற்பனை நிலையங்கள் புதிதாக திறக்கப்பட்டு வியாபார நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படமை குறிப்பிடத்தக்கது.
