க.பொ.த. சாதாரண தரப் பரீட்சைப் பெறுபேறுகளை, மார்ச் மாத இறுதியில் வெளியிடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
இம்முறை க.பொ.த. சாதாரண தரப் பரீட்சைப் பெறுபேறுகளின் மாவட்ட ரீதியிலான அல்லது அகில இலங்கை ரீதியிலான தரப்படுத்தல்கள் வெளியிடப்படமாட்டாது என்று, பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித்த தெரிவித்துள்ளார்.
கடந்த 2019 டிசம்பர் மாதம் இடம்பெற்ற க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை, 4,987 பரீட்சை நிலையங்களில் இடம்பெற்றதோடு, இதில் 7 இலட்சத்து 17,008 பரீட்சார்த்திகள் இப் பரீட்சைக்குத் தோற்றியிருந்தனர்.
இதேவேளை, இம்முறை இடம்பெறவுள்ள க.பொ.த. உயர் தரப் பரீட்சைக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் மார்ச் 2 ஆம் திகதியுடன் நிறைவடைந்திருந்த நிலையில், இது எதிர்வரும் 09 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாகவும் பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
