நீர்க்கொழும்பு, போருதொட பிரதேசத்தை சேர்ந்த 64 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இருதய நோய் என்று கூறி நீர்க்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட குறித்த நபரை வைத்தியர்கள் பரிசோதனைக்கு உட்படுத்திய போது அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, இதுவரை இந்நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்காகி இருவர் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு மேலும் குறிப்பிட்டுள்ளது.
இலங்கையில் இதுவரை 122 பேர் கொரோனா நோயாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அவர்களில் 14 பேர் இதுவரை பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.
அதன்படி, தற்போது வைத்தியசாலைகளில் சிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கை 106 ஆகும்.
மேலும், கொரோனா அறிகுறிகளுடன் 114 பேர் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.
நீர்கொழும்பு தனியார் வைத்தியசாலையில் இருந்து நீர்கொழும்பு பொது வைத்தியசாலைக்கு இன்று மதியம் அதிதீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட 65 வயதான, முகமட் ஜமால் என்பவரே சற்றுமுன் மரணித்துள்ளதாக செய்தி கிடைத்துள்ளது.
இவர் யாழ்ப்பாணத்தை பிறப்பிடமாக கொண்டவரும், நீர் கொழும்பு பலகத்துறையில் வசித்து வந்தவருமாவார்.
