எப்.முபாரக்-
திருகோணமலை மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக திருகோணமலை நகரம் இன்றைய தினம்(16) வெறிச்சோடிக் காணப்பட்டது.
நகரில் மக்களின் நடமாட்டம் சம்பூரணமாக குறைந்து காணப்பட்டதோடு நகரிலுள்ள காலி கோவில்,முஸ்லிம் பள்ளிவாயல்கள்,கிறிஸ்தவ மற்றும் பௌத்த விகாரைகளும் மூடிய வண்ணம் காணப்பட்டது.
வழமையாக கிழமை நாட்களில் திருகோணமலை நகரம் மக்கள் சனத்தினால் நிறைந்து காணப்படும்.
ஆனால் இன்றைய தினம் வழமைக்கு மாறாக காணப்பட்டது.
திருகோணமலை பேருந்து நிலையம், தொடருந்து நிலையம் ஆகியவற்றில் இன்று விரல்விட்டு எண்ணக்கூடிய அளவே ஆள் நடமாட்டம் இருந்ததை காணமுடிந்தது.
பிரதான வீதிகளிலும் ஆள் நடமாட்டம் இருக்கவில்லை என்பதுடன் ஆடை விற்பனை நிலையங்கள் மூடப்பட்டிருந்தன.
நகரில் அனேகமான கடைகள் மூடப்பட்டுள்ளதை அவதானிக்ககூடியதாக இருந்தது.

