கல்முனையில் கொரோனா வைரசைத்தடுக்க 'வருமுன்காப்போம்' திட்டம்!

காரைதீவு நிருபர் சகா-
ல்முனைப்பிராந்தியத்தில் கொரோனா வைரஸைத் தடுக்குமுகமாக 'வருமுன்காப்போம்' என்ற திட்டத்தை கல்முனை பிராந்திய சுகாதாரசேவைகள் பணிமனை முன்னெடுத்துள்ளது.

அதன் ஓரங்கமாக கல்முனை பிராந்திய சுகாதாரசேவைகள் பணியகத்திற்கு உட்பட்ட பெரிய நீலாவணை தொடக்கம் பொத்துவில் வரையான வைத்தியசாலைகள் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைகள் சார்ந்த தொற்றுநோய் தொடர்பான அனைத்து வைத்திய உத்தியோகத்தர்களுக்கும் பொது சுகாதார பரிசோதகர்களுக்கும் கொரோனா வைரஸிலிருந்து மக்களைக்காப்பாற்றுவது தொடர்பில் விசேட செயலமர்வு நேற்று நடாத்தப்பட்டது.
.கல்முனை பிராந்திய சுகாதாரசேவைகள் பணிப்பாளர்வைத்தியகலாநிதி டாக்டர் குணசிங்கம் சுகுணன் தலைமையில் இத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

கல்முனைப் பிராந்திய பணி மனைக்கு குறுpத்த ஆளணியினர் அழைக்கப்பட்டு தொற்றுநோய் தடுப்பு பிரிவின் தலைமை வைத்திய அதிகாரி டாக்டர் நாகூர் ஆரிப் திட்டமிடல் பொறுப்பு வைத்திய அதிகாரி டாக்டர்மாகிர் பணிப்பாளர் டாக்டர் சுகுணனுடன் இணைந்து கல்முனைப் பிராந்தியத்தில் கொரோணா வைரஸின் தாக்கத்தை வருமுன் எவ்வாறு தடுப்பது? தொற்று ஏற்பட்டால் அதை எப்படி கையாள்வது? என்பது சம்பந்தமாக சிறந்த முறையில் விளக்கம் அளிக்கப்பட்டு அனைத்து உத்தியோகத்தர்களும் விடயங்களை கையாளுவதற்கு ஏற்ற போன்று வளப்படுத்தப் பட்டார்கள்.

பணிப்பாளர் சுகுணன் தகவல் தருகையில்:
அப்படியான ஒரு அனர்த்தம் கல்முனைப் பிராந்தியத்தில் தோன்றுமாயின் நாங்கள் சுகாதாரத்துறையினர் சகலவிதமான முன்னேற்பாடுகளுடன் இருக்கின்றோம் என்ற விடயத்தை பொதுமக்களுக்கு அறிய தருவதுடன் வெளிநாடுகளுக்கு சென்று வருபவர்கள் சம்பந்தமாக தகவல்களை பிரதேச செயலகங்களூடhக தினமும் ஆவணப்படுத்தி ஆராய்ந்து உன்னிப்பாக இருக்கின்றோம் என்பதனையும் கூறிவைக்கின்றோம்.

பிரதான சுற்றுலா கேந்திரநிலையமான அறுகம்வே பொத்துவில் பிரதேசத்தில் சுற்றுலா பயணிகள் சம்பந்தமாகவும் கூடிய அவதானம் செலுத்தப்படுகிறது.

அடிக்கடி கைகளை சவர்க்காரம்இட்டு கழுவுவதும் தேவையின்றி சனக்கும்பல்களுக்குள் செல்வதை தவிர்ப்பதும் நாம் பாதுகாப்பாக இருப்பதற்கான வழிகள் ஆகும்.மக்கள் ஒத்துழைத்தால் எமது பிராந்தியத்திற்கு கொரோணா வருவதை நிச்சயம் தடுக்கமுடியும் என்றார்.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -