சாஹிரா கல்லூரி விளையாட்டு விழா கோலாகலமாக ஆரம்பம்

நூருல் ஹுதா உமர்-
ல்முனை கல்வி வலய கல்முனை ஸாஹிரா தேசிய கல்லூரியின் 2020 ஆம் ஆண்டு இல்ல விளையாட்டு போட்டியின் ஆரம்ப நிகழ்வுகள் (11) இன்று பிற்பகல் வெகு விமர்சையாக பாடசாலையின் அதிபர் எம்.ஐ. ஜாபிர் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.

இதன்போது பாடசாலையின் வேண்ட் இசைக் குழுவினரின் இசையோடு அதிதிகள் மலர் மாலை அணிவிக்கப்பட்டு வரவேற்கப்பட்டு தேசிய கொடியேற்றப்பட்டதுடன் தேசிய கீதம், பாடசாலைக்கீதம் என்பன இசைக்கப்பட்டு நிகழ்வானது வைபக ரீதியாக ஆரம்பிக்கப்பட்டது.

இந் நிகழ்வில் பிரதம அதிதியாக கல்முனை வலய கல்வி பணிப்பாளர் எம்.எஸ் .அப்துல் ஜலீல் கலந்து கொண்டார். மேலும் பிரதேச அரச காரியால பிரதானிகள், கல்வி உயர் அதிகாரிகள், பாடசாலை பிரதி அதிபரும், விளையாட்டுச் சபை தவிசாளருமான எம்.எச்.எம்.அபூவக்கர், சிரேஷ்ட விளையாட்டு ஆசிரியரும் விளையாட்டுச் சபை செயலாளருமான அலியார் பைசர், பாடசாலை விளையாட்டுப் பொறுப்பதிகாரியும் போட்டிகளின் பணிப்பாளருமான கே.எம்.தமீம், பாடசாலை அபிவிருத்திச் சபையின் செயலாளர் எம்.ஐ.எம். முஸ்தாக், ஈ-ஸாஹிரா மற்றும் பாடசாலை ஊடக பொறுப்பதிகாரி சஃபி எச்.இஸ்மாயில் உள்ளிட்ட ஆசிரியர்கள், மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து ஒலிம்பிக் தீபம் ஏற்றி வைக்கப்பட்ட்துடன் மாணவர்களின் அணி வகுப்பு, உடற் கண்காட்சி என்பன இடம்பெற்றது.






இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -