ஐரோப்பிய நாடான செக் குடியரசு நாடு ஜேர்மனியின் அருகே அமைந்துள்ளது. ஐரோப்பிய நாடுகளில் சமீப காலமாக மர்மக்காய்ச்சல் பரவி வருகிறது. பிரான்ஸில் கடந்த November மாதம் முதல் தற்போது வரை 22 பேர் இந்த மர்ம காய்ச்சலுக்கு உயிரிழந்துள்ளனர். இவை இன்புளூயென்சா ( influenza ) வைரஸ்கள் மூலம் பரவுவதாகவும் கூறப்படுகின்றது.
இந்நிலையில், இந்த மர்ம காய்ச்சலுக்கு செக் குடியரசில் 12 பேர் பலியாகியுள்ளதாக செக் குடியரசு சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
‘செக் குடியரசு முழுவதும் இந்த இன்புளூயென்சா தொற்றுநோய் பரவியுள்ளது. ஒவ்வொரு ஒரு லட்சம் பேரிலும் 1,865 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மர்ம காய்ச்சல் தொடர்பான இந் நோயில் இதுவரை 12 பேர் பலியாகியுள்ளனர். பொதுவாக குழந்தைகளையும், இளம் வயதினரையும் இந்த நோய் தாக்குகிறது. இந்த மர்ம காய்ச்சலுக்கு ‘இன்புளூயென்சா ஏ வைரஸ்’ முக்கிய காரணமாக இருக்கலாம்.
கடந்த வாரத்தை ஒப்பிடும்போது இந்த தொற்றுநோயின் தாக்கம் 3 மடங்காக அதிகரித்துள்ளது. நோய் பாதிப்புள்ளவர்கள் பொது இடத்துக்கு வரவேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளதாக் செக் குடியரசு சுகாதாரத் துறை அமைச்சு தெரிவித்துள்ளார்.
சைனாவிலிருந்து பரவிய கொரோனா வைரஸ் உலகையே அச்சுறுத்தி வரும் சமயத்தில், இன்புளூயென்சா தொற்றுநோய் ஐரோப்பாவில் பரவிவருவது சற்று அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.