2016ம் ஆண்டு ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து UK வெளியேற முடிவெடுத்தது. இதை “பிரெக்ஸிட்” என்று அழைக்கப்படுகிறது. ஆனால் ‘பிரெக்ஸிட்’ அவ்வளவு எளிதாக அமையவில்லை. ‘பிரெக்ஸிட்’ விடயத்தால் பாராளுமன்றத்தில் போதிய ஆதரவு இல்லாமல் இருந்த நிலையில் அக்காலப்பகுதியில் பிரதமராகவிருந்த இரண்டு பிரதமர்கள் ராஜினாமா செய்துள்ளார்கள்.
அதன் பிறகு UKயின் பிரதமராக வந்த தற்போதைய UKயின் பிரதமர் போரிஸ் ஜோன்சன் ‘பிரெக்ஸிட்’டை நிறைவேற்ற கடும் முனைப்பு காட்டினார். ஆனால் ஆரம்பத்தில் அவருக்கும் அது சாத்தியபடவில்லை. ‘பிரெக்ஸிட்’ ஒப்பந்தத்தை நிறைவேற்ற பாரளுமன்றத்தில் அவருக்கு பெரும்பான்மை பலம் இல்லாததால் பாரளுமன்றத்தை கலைத்துவிட்டு தேர்தலுக்கு சென்றார்.
அத் தேர்தலில் தனிப் பெரும்பான்மையுடன் அமோக வெற்றியும் பெற்றார். அதன் பிறகு மேலும் காலம் நீடிக்காமல் உடனடியாக பாரளுமன்றத்தில் ‘பிரெக்ஸிட்’ ஒப்பந்தத்தை தாக்கல் செய்து அனுமதியைப் பெற்றார். பாரளுமன்றத்தின் இரு அவையிலும் அவ் ஒப்பந்தம் வெற்றிகரமாக ஏற்றுக்கொள்ளபட்டு நிறைவேறியது.
பாராளுமன்ற ஒப்புதலை பெற்ற பின்னர், பிரெக்சிட்டுக்கு பிரித்தானியா ராணி 2ம் எலிசபெத்தும் தனது ஒப்புதலை அளித்தார்.
இந்நிலையில் பெல்ஜியம் தலைநகர் பிரஸல்ஸில் ஐரோப்பிய பாரளுமன்றத்தில் UKயின் பிரதமர் போரிஸ் ஜோன்சனின் ‘பிரெக்ஸிட்’ ஒப்பந்தம் மீது வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. வாக்கெடுப்புக்கு முன்னதாக UK எடுத்த இவ் முடிவின் மீது உணர்ச்சிகரமான விவாதம் நடந்தது. UKயைச் சேர்ந்த ஐரோப்பிய பாரளுமன்ற உறுப்பினர்கள் சிலர் கண் கலங்கிய நிலையில் பேசினார்கள்.
அப்போது, ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறும் UKக்கு பல்வேறு நாடுகளின் பாரளுமன்ற உறுப்பினர்கள் வாழ்த்துக்களையும் தெரிவித்தனர். அதே சமயம், UKயின் எதிர்கால உறவுகள், வர்த்தகம் தொடர்பான பேச்சுவார்த்தை குறித்து சில பாரளுமன்ற உறுப்பினர்கள் கடுமையாக எச்சரித்தனர்.
அதனை தொடர்ந்து, வாக்கெடுப்புக்கு விடப்பட்டது. தற்போதைய ஒப்பந்தத்துக்கு ஆதரவாக 621 பேரும், எதிராக 49 பேரும் வாக்களித்தனர். இதன் மூலம் நீண்ட இழுபறிக்கு பின் UK இன்று ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து முறைப்படி வெளியேறுகிறது.
UKயின் நேரப்படி இன்று இரவு 11 மணிக்கு வெளியேறவிருக்கிறது. அத்துடன் ‘பிரெக்ஸிட்டும் முடிவுக்கு வருகிறது.
இருந்தபோலும் பொருளாதார ரீதியில் எந்தவொரு கொள்கையும் வகுக்காததால், பொருளாதாரம், வர்த்தகம் தொடர்பான விடயங்களிளில் இந்த வருடம் இறுதிவரை ஐரோப்பிய ஒன்றியத்தோடு UK இணைந்தே பயணிக்கும்.
எதிர்வரும் December 31ம் திகதிக்குள் வர்த்தகம் மற்றும் வேறு பல விவகாரம் குறித்து பேச்சுவார்த்தை நடத்தி ஒப்பந்தங்களை ஏற்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஐரோப்பிய ஒன்றிய பாராளுமன்ற தலைவர் டேவிட் சசோலி கூறுகையில்:- ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து UK வெளியேறுவதற்கான ஒப்பந்தத்திற்கு ஐரோப்பிய பாராளுமன்றம் வாக்களித்து ஒப்புதல் வழங்கியுள்ளது. இனி ஐரோப்பிய ஒன்றியம், UK விலகுவதற்கான இறுதி ஒப்புதலை அளிக்க வேண்டும், அதன் பின்னர் January 31ம் திகதி நள்ளிரவு, ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து UK முறையாக வெளியேறலாம்.
முதல் முறையாக, ஒரு ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடு ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு வெளியேறுகிறது. இது வருத்தமளிக்கக்கூடியது என்றாலும், ஐரோப்பிய ஒன்றிய பாராளுமன்றம் UK மக்களின் விருப்பத்திற்கு எப்போதும் மதிப்பளிக்கிறது’ என கூறினார்.
ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து UK வெளியேறிய பிறகு ஏற்படவுள்ள மாற்றங்கள் .
*UKயின் சார்பில் ஐரோப்பிய ஒன்றிய பாரளுமன்றத்தில் உறுப்பினராக இருக்கும் 73 பேர் தங்களது பதவியை இழப்பார்கள்.
* ஐரோப்பிய ஒன்றியத்தின் மாநாடுகளில் UKயின் பிரதமர் மற்றும் அமைச்சர் பங்குபற்ற வேண்டிய கட்டாயம் இல்லை.
* பொருட்கள் மற்றும் சேவைகளை வாங்குவதற்கும், விற்பனை செய்வதற்கும் புதிய விதிகளை அமைப்பது குறித்து உலக நாடுகளுடன் UK பேச ஆரம்பிக்க முடியும்.
* UKயின் பாஸ்போர்ட்டின் நிறம் மாற்றப்படும். 30 வருடத்துக்கு முன்பு பாவனையிலிருந்த நீல நிறத்துக்கு UKயின் பாஸ்போர்ட் மாறும்.
* ‘பிரெக்ஸிட்’ நினைவாக January 31 திகதியை தாங்கிய 50 பென்ஸ் நாணயம் (½ பவுண்ட்) ( சுமார் 115 ரூபா ) இன்று முதல்
பாவனைக்கு வரும்.