தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் உயர் கல்வியை பூர்த்தி செய்துள்ள காவத்தமுனையைச் சேர்ந்த உசனார் றினோஸ் ஓட்டமாவடி ரேஞ்சர்ஸ் கழகத்தினால் கௌரவிக்கப்பட்டார்.
குறித்த கழகத்திலிருந்து பல்கலைக்கழகங்களுக்கு தெரிவு செய்யப்பட்டுள்ள மற்றும் உயர் கல்வியை முடித்து வெளியாகும் மாணவர்களை கழகத்தின் நிர்வாகத்தினர் கௌரவித்து வருகின்றனர்.
அந்தவகையில் கழகத்தின் வீரரான றினோஸ் தனது பல்கலைக்கழக கல்வியை பூர்த்தி செய்தமையை பாராட்டி செவ்வாய்க்கிழமை (28) கௌரவிக்கப்பட்டார்.
ஓட்டமாவடி பிரதேச சபையின் உறுப்பினரான எம்.பீ.எஸ். ஜெஸீமாவின் புதல்வரான றினோஸை அவரது வீடு சென்று கழக நிர்வாகத்தினர் நினைவுச் சின்னம் வழங்கி கௌரவித்தமை குறிப்பிடத்தக்கது.