தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணி கட்சியின் கலாச்சார பிரிவின் பொங்கல் விழா

பாறுக் ஷிஹான்-

மிழர் ஐக்கிய சுதந்திர முன்னணி கட்சியின் கலாச்சார பிரிவின் பொங்கல் விழா கலாச்சாரப் பிரிவு தலைவர் சிவஸ்ரீ த. ரதிகரசர்மா தலைமையில் மட்டக்களப்பு களுதாவளை ஈஸ்வரன் ஆலய முன்றலில் வெள்ளிக்கிழமை (31) நண்பகல் பாரம்பரிய தமிழர் பண்பாட்டு கலாசார முறையில் கதிர் அடித்து நெல்குற்றி புத்தரிசை பானையிலிட்டு பொங்கல் நிகழ்வு ஆரம்பமாகியது .

இந்த நிகழ்வுக்கு பிரதம அதிதியாக தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் பிரதியமைச்சருமான கருணா அம்மான் என்று அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் ஆத்மீக அதிதிகளாக கிழக்கு இந்து குருமார் சங்கத் தலைவர் சிவஸ்ரீ க .கு. சச்சிதானந்தசிவம் குருக்கள், சிவஸ்ரீ வே.கு.சபாநாயக குருக்கள், தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் மேலதிக செயலாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சே.ஜெயானந்த மூர்த்தி , அபிவிருத்தி செய்து களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உபுல் குணவர்தன, களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலை பணிப்பாளர் க. புவநேந்திரநாதன் ,மதகுருமார்கள், ஆலய பரிபாலன சபையினர், கிராம அபிவிருத்தி சங்கத்தினர் , மாதர் சங்கத்தினர், கட்சியின் ஆதரவாளர்கள், பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.

இவ்விழாவில் கலை கலாசார நிகழ்வுகள் அரங்கேற்றப்பட்டதுடன் பாரம்பரிய உடுக்கையடி வில்லுப்பாட்டுஇ தமிழர்களின் பாரம்பரிய கலை கலாசார அம்சங்கள் உள்ளடங்கிய கிராமிய நிகழ்வுகளும் இடம்பெற்றன.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -