கடந்த ஜனாதிபதி தேர்தலை நோக்கும் போது கல்முனை, சம்மாந்துறை, பொத்துவில் தொகுதிகளின் சிறுபான்மை வாக்குகள் சுமார் 25 ஆயிரமாகும். பொத்துவில் தொகுதியில் 20 ஆயிரம் கிடைத்திருந்தாலும் அதில் சுமார் பத்தாயிரம் சிங்கள மக்களின் வாக்குகளாகும். அவர்கள் சிங்களவருக்கே பொது தேர்தலில் வாக்களிப்பார்கள்.
பொது தேர்தலில் 5 சிங்களவர்களும் 3 அல்லது 4 முஸ்லிம் வேட்பாளரும் நியமிக்கப்படலாம். சிங்களவர் 4 எனும் போது 4 முஸ்லிம் 2 தமிழர் என வரலாம். ஆனாலும் சிங்கள வாக்குக்களே அதிகம் என்பதால் 5 சிங்களவர் நியமிக்கப்படுவதற்கான சாத்தியக்கூறே அதிகம்.
முஸ்லிம்க தரப்பில் அதாவுள்ளாவும் சம்மாந்துறை, கல்முனை, நிந்தவூர் என நால்வர் நியமிக்கப்படலாம். இந்த நிலையில் மொட்டுக்கட்சி மாவட்டத்தை வெல்லும் போது மட்டுமே ஒரு முஸ்லிம் வெல்ல முடியும். அக்கட்சி இரண்டாம் இடத்துக்கு வந்தால் இன்றைய இதே வாக்குகள் கிடைத்தால் ஒரு முஸ்லிமும் வெல்வது கடினம்.
பொதுஜன பெரமுன ஆளும் கட்சியாக இருப்பதால் இந்த 4 மாதத்துக்குள் முஸ்லிம் வாக்குகள் அதிகரிப்பதாயின் அரசு பாரிய திட்டங்களை நடை முறைப்படுத்த வேண்டும். ஆனால் யதார்த்தத்தில் அப்படி காணவில்லை.
முஸ்லிம் அமைச்சர் நியமிக்காமை, மொட்டு கட்சியின் வெற்றிக்காக உழைத்த கட்சிகள், நபர்கள் ஒதுக்கப்பட்டமை, மொட்டுவுடன் இணைந்துள்ள முஸ்லிம் கட்சிகளின் ஒற்றுமையான செயற்பாடின்மை, முஸ்லிம் சமூகத்துக்கான அபிவிருத்தி விசேட திட்டங்கள், பிரச்சினைகளை தீர்த்து மக்களை கவரும் வேலைகள் பற்றி ஆலோசிக்காமை போன்ற பல விடயங்களால் ஏலவே கிடைத்த வாக்கிலும் சரிவு ஏற்படும் போல் உள்ளது.
முஸ்லிம் காங்கிரசும், மக்கள் காங்கிரசும் ஜனாதிபதி தேர்தலில் தோற்று போனாலும் அம்பாரை மாவட்ட முஸ்லிம்கள் மத்தியில் களத்தில் நின்று எதையாவது பேசிக்கொண்டும் எதையாவது கொடுத்துக்கொண்டும் இருக்கின்றன. ஆனால் வெற்றி பெற்ற மொட்டு கூட்டணி எந்த செயற்பாடும் அற்ற நிலையில் காணப்படுகிறது.
இப்படியே போனால் பொதுத்தேர்தலில் அம்பாரை மாவட்டத்தில் மொட்டுக்கட்சி தோற்று ஒரேயொரு எம் பி கிடைக்கலாம். சில வேளை சிங்கள மக்கள் ஒற்றுமைப்பட்டு மூவருக்கு சரிசமமாக வாக்களித்தால் முஸ்லிம் ஒருவர் கிடைக்காமல் போகும்.
முஸ்லிம்கள் மத்தியில் விருப்பு வாக்கு சண்டை அதிகமாக இருக்கும். அதாவுள்ளா தனிக்கட்சி என்பதால் அவருக்கும் நேரடி மொட்டு வேட்பாளர்களுக்கும் இடையில் விருப்பு வாக்கில் பிரச்சினைகள் வரலாம். இது அனைவருக்கும் தோல்வியாக முடியும்.
ஆகவே இது பற்றி அவசியம் பொதுஜன பெரமுன சிந்திக்க வேண்டும்.
சில வேளை நாம் ஒன்றும் கவலைப்பட தேவையில்லை, ஹக்கீம் புறோக்கர் அம்பாரை மாவட்டத்தை வென்று நம்முடன் சேர்வார், அது போதும் என பொதுஜன பெரமுன சிந்திக்கிறதோ தெரியவில்லை.
