திருகோணமலை மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வருகின்ற அடை மழை காரணமாக திருகோணமலை கரையோரங்களின் கடலலைகளின் தாக்கம் அதிகரித்து காணப்படுகின்றது.
இம்மாவட்டத்தின் திருகோணமலை, மூதூர்,கிண்ணியா மற்றும் நிலாவெளி, குச்சவெளி மற்றும் புல்மோட்டை போன்ற பகுதிகளில் கடலலைகளின் தாக்கம் காரணமாக மீனவர்கள் கடலுக்குச் செல்வதில் அவதானமாக இருக்குமாறு திருகோணமலை கடற்றொழில் அலுவலகம் மீனவர்களை அறிவுறுத்தியுள்ளது.
மீனவர்கள் இன்று(26) யாரும் கடற்றொழிலுக்கு செல்லாது இருந்ததோடு படகுகள் கடையோரங்களில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.இதனால் கடற்கரையோரங்கள் வெறிச்சோடிக் காணப்பட்டது.
திருகோணமலை மாவட்டத்தின் கடந்த இரண்டு நாட்களாக தொடர்ச்சியான அடை மழை காரணமாக தாழ் நிலப்பகுதிகளில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது.
