ஓய்வு பெற்று செல்லும் கிழக்குமாகாண சிரேஷ்ட பிரதிப்பொலிஸ் மா அதிபரை கௌரவிக்கும் நிகழ்வு

பாறுக் ஷிஹான்-
ய்வு பெற்று செல்லும் கிழக்குமாகாண சிரேஷ்ட பிரதிப்பொலிஸ் மா அதிபரை கௌரவிக்கும் நிகழ்வு செவ்வாய்க்கிழமை ( 19) மட்டக்களப்பில் நடைபெற்றது .
இலங்கை பொலிஸ் சேவையில் 37 வருடங்கள் சேவையாற்றி பல பதவி உயர்வுகளை பெற்று 2017 ஆண்டு முதல் கிழக்குமாகாண சிரேஷ்ட பிரதிப்பொலிஸ் மா அதிபராக கடமையாற்றி ஒய்வு பெற்று செல்லும் கிழக்குமாகாண சிரேஷ்ட பிரதிப்பொலிஸ் மா அதிரபர் எச் .டி .கே .எஸ் ஜயசேகரவை கௌரவிக்கும் நிகழ்வு பிற்பகல் மட்டக்களப்பு வெபர் மைதானத்தில் நடைபெற்றது
நிகழ்வின் ஆரம்ப நிகழ்வாக வாகன அணிவகுப்பு மரியாதையுடன் மைதானத்திற்கு அழைத்துவரப்பட்ட பொலிஸ்மா அதிபரை பொலிஸ் அதிகாரிகளின் அணிவகுப்பு மரியாதையுடன் வரவேற்கப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டது
இதனை தொடர்ந்து இவரை கௌரவிக்கும் வகையில் இலங்கை பொலிஸ் சேவையில் 37 வருட சேவையினை பாராட்டி சிறப்புரைகள் இடம்பெற்றதுடன் நினைவு சின்னங்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டார்
இந்நிகழ்வில் மாவட்ட அரசாங்க அதிபர் எம் .உதயகுமார் , மாநகர முதல்வர் தியாகராஜா சரவணபவன் , மாநகர ஆணையாளர் கே .சித்திரவேல் கிழக்கு மாகான பொலிஸ் மா அதிபர் , மட்டக்களப்பு ,அம்பாறை பிரதி பொலிஸ் அத்தியட்சகர் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் ,மாவட்ட பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள் ,பொலிஸ் உத்தியோகத்தர்கள் மற்றும் பொலிஸ்மா அதிபரின் குடும்ப உறுப்பினர்கள் என் பலர் கலந்துகொண்டனர் கலந்துகொண்டனர்.






இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -