அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் வெற்றிப் பெருவிழாவும் கெளரவிப்பும்

பைஷல் இஸ்மாயில் -
க்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் முன்னேற்றப் பாதைக்கும், 2019 ஆம் ஆண்டுக்கான ஜனாதிபதி சுற்றடல் தங்க விருதுபெற முன்னோடியாக உழைத்த வைத்தியசாலையின் அனைத்து உத்தியோகத்தர்களுக்கும், ஊழியர்களுக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கின்ற இதேவேளை, தங்களின் ஒத்துழைப்புக்களை தொடர்ந்தும் வழங்குமாறு வைத்திய அத்தியட்சகர் ஐ.எம்.ஜவாஹிர் கேட்டுக்கொண்டுள்ளார்.
அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் வெற்றிப் பெருவிழாவும், 2019 ஜனாதிபதி சுற்றடல் தங்க விருதுபெற முன்னோடியாக உழைத்த வைத்தியசாலையின் ஊழியர்களை கெளரவிக்கும் நிகழ்வும் வைத்தியசாலையின் மண்டபத்தில் வைத்திய அத்தியட்சகர் ஐ.எம் ஜவாஹிர் தலைமையில் இடம்பெற்றபோது அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இந்நிகழ்வில் வைத்திய நிபுணர்களான பி.கே.இரவீன்திரன், யுரேக்கா விக்ரமசிங்க, ஹிதாயா தாஜுதீன், அஜித்குமார, வைத்தியர் எம்.ஜே.நெளபல் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
ஜனாதிபதி சுற்றடல் தங்க விருதுபெற முன்னோடியாக உழைத்த வைத்தியசாலையின் ஊழியர்கள் கௌரவிக்கப்பட்டதுடன் சமுதாய பொறுப்பு நிருவன திட்டத்திற்கு உதவி வழங்கிய வெளி அமைப்பினர் உட்பட ஏனய சகல ஊழியர்களுக்கும் நினைவுப் பரிசில்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

மேலும், அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையானது 2019 ஜனாதிபதி சுற்றாடல் விருது வழங்கும் விழாவில் தேசிய ரீதியாக தங்கவிருதும், தேசிய பசுமை அறிக்கை வெளியீட்டில் சிறப்பு விருதும் பெற்றுக் கொண்டமையும் குறிப்பிடத்தக்கது.





இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -