யாழ்ப்பாணம், வன்னி, கிழக்கு மாகாணம், மலையகம், தென்னிலங்கை, கொழும்பு, புத்தளம் என கணிசமான தமிழர்களும் முஸ்லிம்களும் பொதுஜன பெரமுனவுக்கு வாக்களித்துள்ளனர்.
இவர்கள் அனைவருக்கும் உலமா கட்சி தனது நன்றியையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறது
அதே போல் இனியாவது தமிழ் மக்களும் நன்கு சிந்தித்து ஒன்றில் பொதுஜன பெரமுனவுடன் நேரடியாக அல்லது பெரமுனவுடன் இணைந்துள்ள தமிழ், முஸ்லிம் கட்சிகளுடன் இணைந்து அவற்றை பலப்படுத்த முன் வரவேண்டும். அதனூடாக நமக்கான அரசியல் நலன்களை பெற முடியும்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு கிடைத்துள்ள அமோக வாக்குகள் என்பது இன்னும் இருபது வருடங்களுக்கு இந்த நாட்டின் ஆளும் கட்சியான பொதுஜன பெரமுனவே இருக்கப்போகிறது என்ற செய்திகளை நமக்கு சொல்லியுள்ளது. இதனை தமிழ், முஸ்லிம் மக்கள் மிகவும் நிதானமாக சிந்தித்து பெரமுனவை பலப்படுத்த முன் வர வேண்டும் என உலமா கட்சி கேட்டுக்கொள்கிறது.
- முபாறக் மஜீத்
தலைவர்,
உலமா கட்சி.