நிதியமைச்சராக இன்று (திங்கட்கிழமை) அமைச்சில் கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்ட அவர், அங்கு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், “இலங்கையின் பொருளாதாரம், அரச- தனியார் துறை என அனைத்தும் வீழ்ச்சியடைந்துள்ளது.
இதனால், மக்கள் நாட்டின் பொருளாதாரத்தின் மீது நம்பிக்கை அற்றவர்களாகத்தான் இருக்கிறார்கள்.
முதலீட்டாளர்கள் இலங்கையில் முதலீடுகளை மேற்கொள்ள தயங்குகிறார்கள். வியாபாரங்கள் அனைத்தும் வீழ்ச்சியடைந்துள்ளன.
வங்கிக் கடன் அதிகரித்துள்ளது. இதனால். இலங்கை இன்று வீழ்ச்சியடைந்துள்ளது. இதிலிருந்து நாட்டை மீட்டெடுக்க வேண்டிய பொறுப்பு எமக்கு உள்ளது.
வீழ்ச்சியடைந்துள்ள பொருளாதாரத்தை மீண்டும் கட்டியெழுப்ப வேண்டும். நிதிக் குற்றப்புலனாய்வு பிரிவில் கைது செய்யப்படலாம் என அரச அதிகாரிகள் அச்சத்துடன்தான் இதுவரைக் காலமும் இருந்து வந்தார்கள்.
நாம் எதிர்காலத்தில் அரச அதிகாரிகளின் இந்த அச்சத்தை நீக்க நடவடிக்கை எடுப்போம் என்பதை இவ்வேளையில் கூறிக்கொள்கிறோம்” என மேலும் தெரிவித்தார்.
