இந்த விடயம் தொடர்பாக ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளரும் அமைச்சருமான அகிலவிராஜ் காரியவசம் சபாநாயகர் கருஜயசூரியவுக்கு கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளார்.
குறித்த கடிதத்திலேயே அவர், ரணில் விக்ரமசிங்கவை எதிர்க்கட்சித் தலைவராக நியமிக்குமாறு வலியுறுத்தியுள்ளார்.
தான் பிரதமர் பதவியில் இருந்து விலகுவதாகவும் இன்றைய தினம் உத்தியோகபூர்வமாக ஜனாதிபதிக்கு அறிவிக்கவுள்ளதாகவும் ரணில் விக்ரமசிங்க நேற்று ஊடகங்களுக்கு அறிக்கையொன்றை வௌியிட்டு குறிப்பிட்டிருந்தார்.
அதன்படி ரணில் விக்ரமசிங்க இன்று முற்பகல் தனது இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் கையளித்துவிட்டு அலரி மாளிகையில் இருந்து விடைப்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.