மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தின் வலய மட்ட மாணவர் பாராளுமன்றத்தின் 2019-2020 ஆம் ஆண்டிற்கான பாராளுமன்ற அமர்வு காத்தான்குடி பிரதேச கல்விப் பணிப்பாளர் ஏ.ஜீ.எம்.ஹக்கீம் தலையில் புதன்கிழமை (27) மட்/மம/ஹிழுறியா வித்தியாலத்தில் இடம்பெற்றது.
இப் பாராளுமன்ற நிகழ்வில் பிரதம அதிதியாக மட்டக்களப்பு மத்தி கல்வி வலைய கல்விப் பணிப்பாளர் கலாநிதி எஸ்.எம்.எம்.எஸ் உமர் மெளலானா கலந்துகொண்டதுடன் சபைச் செயலாளராகவும் பணியாற்றினார், அத்துடன் வலய பிரதிக் கல்விப் பணிப்பாளர் எம்.ஏ.ரிஸ்மியா பானூ அவர்களும் கலந்து கொண்டனர்.
அதனைத்தொடர்ந்து 2019- 2020 க்கான பாராளுமன்ற சபையின் சபாநாயகர், பிரதமர், சபை முதல்வர், பிரதி சபாநாயகர்,பிரதி செயற்குழுத் தலைவர், அமைச்சர்கள் , பிரதி அமைச்சர்கள், ஆலோசனை செயற்குழுக்கள் தெரிவு இடம்பெற்றது.
இப் பாராளுமன்றத்தில் மட்டக்களப்பு மத்தி வலையத்தை சேர்ந்த மூன்று கோறளைப் பற்று, ஏறாவூர், காத்தான்குடி கோட்டத்தைச் பிரதிநிதித்துவப்படுத்தும் 39 பாடசாலைகளை சேர்ந்த 78 மாணவர்கள் பாராளுமன்ற உறுப்பினர்களாக கலந்துகொண்டனர்.
இத்தெரிவுகளை சுதந்திரமாகவும், நீதியாகவும் ,நடுநிலையாகவும் ஆசிரிய ஆலோசகர்களான ஏ.எல்.ஏ.சலாம்,எம்.ஆர்.ஜவாத் ஆகியோர் கடமையாற்றியிருந்தமை குறிப்பிடக்கது.


















