ஏழை மக்களினதும் கல்விமான்களினதும் புரட்சியே சஜித்தை வேட்பாளராக்கியது- ஆப்தீன் எஹியா!


ஊடகப்பிரிவு-

ந்த ஜனாதிபதி தேர்தலானது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு தேர்தலாகும். சந்திரிக்கா அம்மையார் தொட்டு ஜனாதிபதி மைத்திரி பால சிறிசேன வரை அரசியலமைப்பை முழுமையாக மாற்றி பாராளுமன்றத்திற்கு அதிகாரங்களை வழங்குவேன் என தங்கள் தேர்தல் பிரச்சாரங்களை ஆரம்பித்தனர். இந்நிலை மாறி மக்கள் புரட்சியின் ஊடாகவே இன்று சிறந்த வேற்பாளர் ஒருவர் தெரிந்தெடுக்க அடிப்படை ஏழை மக்கள்,கல்விமான்கள் வேண்டுகோள் கோஷம் விடுத்து ஜனாதிபதி வேட்பாளராக தெரிவு செய்யப்பட்டிருப்பவரே சஜித் பிரேமதாச என முன்னால் மாகாண சபை உறுப்பினர் ஆப்தீன் எஹியா தெரிவித்தார்.

புதிய ஜனநாய முன்னணி வேற்பாளர் சஜித் பிரேமதாசவை ஆதரித்து சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதேச சபை உறுப்பினர் ஜெஸிம் அவர்களின் ஏற்பாட்டில் நேற்று (07) புழுதிவயலில் இடம் பெற்ற பொதுக்கூட்டத்திலே கலந்துக்கொண்டு உறையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் அவர் உறையாற்றுகையில்,

ஒற்றுமையுடனான நாட்டை கட்டியெழுப்பவும்,ஊழலற்ற ஆட்சியை முன்னெடுக்கவும், மக்களுக்கான ஒரு தலைவராக சஜித் பிரமதாசவே தகுதியுடையவர் என மக்கள் நாடு பூராக கைகோர்க்கின்றனர்.

பெரும்பாண்மை மக்களின் அலையும் சஜித் பிரமதாச பக்கமிறுக்க, அட்ப பணத்துக்காக சிறுபான்மை சமூகத்தின் வாக்குகளை சின்னாபின்னமாக்க " ஜனாதிபதியை தீர்மானிக்கும் வேட்பாளர் " என கூறிக்கொண்டு ஒட்டகத்தில் மறைமுகமாகவும் இன்னும் சிலர் நேரடியாகவும் எம் சமூகதின் கண்ணை குருடாக்கமுயற்சிக்கின்றனர்.

எங்களது பிரதேச மக்களிடம் கூட சில தவறான பொய்யான பரப்புரைகளை மேற்கொண்டுள்ளதை நாம் அறிந்ததாலயே மக்களிடயே தலம்பல் ஏற்படக்கூடாதென்ற நல்லெண்ணத்திலேயே இதனைக் கூறுகின்றேன்.

அத்தோடு ஜே.வி.பி மூன்றாம் நிலையிலில்லாது, போட்டியில் சிறுபான்மை சமூகத்தின் வாக்காள் மட்டும் வெற்றியடையும் என்றிருந்தால் நானும் வாக்களித்திருப்பேன், நீங்களும் வாக்களிக்களாம், ஆனால் மூன்றாம் நிலையிலிருக்கும் ஜே.வி.பி.க்கு வாக்களித்து பலனில்லை என தெரிந்தும் வாக்களிப்போமயேயானால்,அது நாம் கோட்டாவின் வெற்றிக்கு துணைப்போவது எனத்தெரிந்தும் அந்த தவறை செய்யக்கூடாது.

இங்கு கூடியிருக்கும் எமக்கோரு கடமையுள்ளைது, நாம் எவ்வாறு திடமாக உள்ளோமோ அதைப்போல் ஏன் சஜித்திற்கு வாக்களிக்க வேண்டுமென்பதை நண்பர்கள் உறவினர்கள் மத்தியில் கொண்டுப்போய் சேர்த்திட வேண்டும் . எனவும் வேண்டுகோள் விடுத்தார்.

இந்நிகழ்வில் அமைச்சரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவருமான ரவுப் ஹக்கிம்,மற்றும் முன்னால் பா.உ. நவவி, முன்னால் மாகாண சபை உறுப்பினர் நியாஸ்,பிரதேச சபை உறுப்பினர்கள்,ஐ.தே.முன்னணியின் அமைப்பாளர்கள் என பலரும் கலந்துக்கொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -