உள்நாட்டு ஆராய்ச்சியாளர்களுடன் வெளிநாட்டுப் பிரமுகர்கள் பலர் பங்குகொண்டு, Sustainability through business, humanities and technologies எனும் தொனிப்பொருளின் கீழ், ஆராச்சி கட்டுரைகளை சமர்ப்பித்து விவாதித்த சர்வதேச ஆராய்ச்சி மாநாடு, தென்கிழக்குப் பல்கலைக்கழக வர்த்தக முகாமைத்துவ பீடத்தின் ஏற்பாட்டில் அரபு மற்றும் இஸ்லாமிய கற்கைகள் பீடத்தின் கேட்போர் கூடத்தில் 2019.11.25 ஆம் திகதி, நிகழ்வின் தலைவர் வர்த்தக முகாமைத்துவ பீடத்தின் பீடாதிபதி கலாநிதி எஸ்.குணபாலன் தலைமையில் இடம்பெற்றது.
திருமதி ஏ.எம்.ஐனுல் ஜாரியாவின் வழிகாட்டலின் கீழ் இடம்பெற்ற இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக உபாவேந்தர் பேராசிரியர் எம்.எம்.எம்.நாஜீம் அவர்கள் கலந்துகொண்டிருந்தார்.
விஷேட பேச்சாளராக இந்திய ஹைதராபாத்தின் NIRD&PR இன் தலைவர் பேராசிரியர் சங்கர் சத்தார்ஜி அவர்கள் கலந்து கொண்டு உரையாற்றியதுடன் நிபுணத்துவ உரையை, வவுனியா Extreme SEO Internet Solution நிறுவனத்தின் தலைவர் சரண்யன் சர்மா அவர்கள் கலந்து கொண்டு உரையாற்றினார்.
குறித்த சர்வதேச ஆராய்ச்சி மாநாட்டுக்கு 118 ஆராய்ச்சி கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட்டிருந்த போதிலும் விவாதத்துக்காக 98 கட்டுரைகள் எடுத்துக்கொள்ளப்பட்டன.
நிகழ்வின்போது புதிதாக பதவி உயர்வு பெற்ற பேராசிரியர் ஏ.ஜௌபர் அவர்கள் கௌரவிக்கப்பட்ட அதேவேளை நினைவுச்சின்னங்களும் அதிதிகளுக்கு வழங்கி வைக்கப்பட்டது.
பதிவாளர் எச்.அப்துல் சத்தார், நூலகர் எம்.எம்.றிபாயுடீன், பீடாதிபதிகளான கலாநிதி யூ.எல்.செய்னுடீன், கலாநிதி எஸ்.எம்.ஜுனைடீன் மற்றும் கலாநிதி றமீஸ் அபூபக்கர் உள்ளிட்டவர்களும் திணைக்களங்களின் தலைவர்கள் உள்நாட்டு வெளிநாட்டு கட்டுரையாளர்கள்,விரிவுரையாளர்கள், உதவிப்பதிவாளர் மற்றும் ஏனைய நிருவாக உத்தியோகத்தர்கள் கல்விசார உத்தியோகத்தர்கள் என பலரும் பங்குகொண்டிருந்தனர். இறுதியில் கலாநிதி எம்.ஜி.எச்.சித்தி ஷபானாவின் நன்றியுடன் நிகழ்வு நிறைவுற்றது.