இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழக பிரயோக விஞ்ஞான பீடத்தின் 8 வது வருடாந்த விஞ்ஞான ஆய்வரங்கு பிரயோக விஞ்ஞான பீட கேட்போர் கூடத்தில் 2019-11-07 ஆம் திகதி இடம்பெற்றது.
தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பேராசிரியர் எம்.எம்.எம்.நாஜீம் அவர்கள் பிரதம அதிதிதியாக கலந்துகொண்ட இவ் விஞ்ஞான ஆய்வரங்குக்கு சிறப்புப் பேச்சாளராக பேராதனை பல்கலைக்கழக விஞ்ஞான பீட பேராசிரியர் எம்.ஏ.கரீம் அவர்கள் கலந்து சிறப்புரையாற்றினார்.
விஞ்ஞான ஆய்வரங்கின் இணைப்பாளர் எம்.ஏ.ஏ.எம்.பஹம் அவர்களின் வழிநடத்தலின் கீழ் பிரயோக விஞ்ஞான பீடத்தின் பீடாதிபதி கலாநிதி யூ.எல்.செய்னுடீன் அவர்களது தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் 30 ஆய்வுக்கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட்டது.
நிகழ்வின் இறுதியில் செயலாளர் TBNS மடுகல்ல நன்றியுரை நிகழ்த்திய அதேவேளை பிரதம அதிதிக்கும் விஷேட பேச்சாளருக்கும் நிகழ்வு மலரும் விஷேட பேச்சாளருக்கு ஞாபக சின்னமும் வழங்கி வைக்கப்பட்டது