விரைவில் சா.தர தமிழ் சமயப்பாடங்களில் மாகாணபொதுப்பரீட்சை.
கிழக்கு மாகாண கல்விப்பணிப்பாளர் மன்சூர் தகவல்.
காரைதீவு நிருபர் சகா-
கிழக்கு மாகாணத்திலுள்ள 17 கல்விவலயங்களில்இம்முறை க.பொ.த.சா.தரபரீ;சைக்குத் தோற்றவுள்ள 100மாணவர்களைவிடகூடுதலான மாணவர்களைக் கொண்ட பாடசாலை அதிபர் சா.தரம்கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு 120நிமிட திசைகோட்படுத்தல் செயலமர்வு நடாத்தப்படவிருக்கிறது என கிழக்கு மாகாண கல்விப்பணிப்பாளர் எம்.கே.எம்.மன்சூர் தெரிவித்தார்.
அந்தவகையில் முதற்கட்டமாக கல்முனை வலயத்தில் நாளை(11)திங்கட்கிழமை பிற்பகல் 3மணி தொடக்கம்5மணிவரையிலான 120நிமிடநேரம் இச்செயலமர்வு கல்முனை வலயக்கல்விப்பணிமனையில் நடைபெறவிருக்கிறது.
கல்முனை வலயத்தில் 100மாணவர்களை விடக்கூடுதலாக சா.த.பரீட்சைக்குத்தோற்றும் பாடசாலை அதிபர்ஆசிரியர்கள் அழைக்கப்பட்டிருக்கிறார்கள்.அவர்களுக்கான விளக்கவுரையை கிழக்கு மாகாண கல்விப்பணிப்பாளர் மன்சூர் 120நிமிடநேரம் வழங்குவார்.
பணிப்பாளர்மன்சூர்கூறுகையில்:இலங்கையிலுள்ள மாகாணங்களில் கிழக்கு சா.தர. கல்விஅடைவுமட்டத்தில் 9ஆம்தரத்திலிருப்பதாக கடந்தபலஆண்டுகளாக கூறிவருகிறார்கள்.அதனை 7ம்தரத்திற்கு கொண்டுவர வேண்டுமானால் மேலும் 600 சி தர திறமைச்சித்திகளைப்பெறவேண்டும். அதற்காக அதிபர்கள்ஆசிரியர்கள்மாணவர்கள் வலயங்கள் இம்முறை உழைக்கவேண்டும்.
கூடைப்பாடங்களைப்பொறுத்தவரை கிழக்கில் திருப்திகரமான நிலை நிலவுகிறது. எனவே மாகாணத்தின் ஏற்பாட்டில் தமிழ் மற்றும் சமய பாடங்களில் மாகாண பொதுப்பரீட்சைதேர்தல் முடிந்த கையோடு சகல வலயங்களிலும் க.பொ.த.சா.த மாணவர்களுக்கு நடாத்தப்படவிருக்கிறது.
பரீட்சைமுடிந்தகையோடு விடைத்தாள்திருத்துவதற்கு ஏதுவாக விடையளிக்கும் புள்ளியிடல்திட்டமும்அனுப்பிவைக்கப்படும் என்றார்.
2020இல் சா.த.பரீட்சையில் அதிபர்கள் என்னசெய்யவிருக்கிறார்கள் என்ற முன்திட்டத்தைதயாரிப்பதற்கு முறையான படிவம் அங்குவழங்கப்படும். அதன்படி அவர்கள் திசைகோட்படுத்தப்படுத்தப்படவுள்ளனர்.
எனவே அதிபர்கள்வராத பாடசாலை சார்பில் ஆசிரியர்களின்பிரசன்னம் தேவைப்படாது என்றார்.