திருகோணமலை மாவட்டத்தில் கந்தளாயில் அரச ஊழியர்களின் தபால் வாக்களிப்பு நடவடிக்கைகள் இன்று(31) காலை 7மணிக்கு ஆரம்பமானது.
சுமூகமாகமும் அமைதியான முறையிலும் ஆசிரியர்கள் தமது வாக்கு பதிவினை மேற்கொண்டார்கள்.
அரச ஊழியர்கள் சந்தோசத்துடன் தபால் வாக்கினை அளித்து வருவதை அவதானிக்க முடிகின்றது.
திருகோணமலை மாவட்டத்தின் கந்தளாய், கிண்ணியா,மூதூர்,வெருகல், புல்மோட்டை,கோமரங்கடவெல போன்ற பகுதிகளிலும் அனைத்து அரச அலுவலகங்களிலும் வாக்குத் பதிவு நடைபெற்று வருகின்றன.
அத்தோடு தபால் வாக்களிப்பு நடவடிக்கைகளை முன்னிட்டு பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது.
இராணுவத்தினர் ரோந்து நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதையும் காணக்கூடியதாக உள்ளது.
ஊடகவியலாளர்களுக்கு உள்ளே செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது