நாட்டில் சஜித் பிரேமதாஸ ஆட்சிப்பொறுப்பை ஏற்றவுடன் பெண்களின் விகிதாசாரம் அனைத்து துறைகளிலும் அதிகரிக்கப்படும்

எப்.முபாரக்-
நாட்டில் சஜித் பிரேமதாஸ ஆட்சிப்பொறுப்பை ஏற்றவுடன் பெண்களின் விகிதாசாரம் அனைத்து துறைகளிலும் அதிகரிக்கப்படும் என திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும்,ஐக்கிய தேசியக் கட்சியின் மூதூர் தொகுதி அமைப்பாளருமான இம்ரான் மஹ்ரூப் தெரிவித்தார்.
ஜனாதிபதி வேட்பாளர் அமைச்சர் சஜித் பிரேமதாசாவின் பணிப்புரைக்கமைய திருகோணமலை மாவட்ட பெண்களின் பிரச்சினைகள் சம்மந்தமாக ஆராயும் கூட்டமொன்று இன்று(18) மூதூர் பகுதியில் நடைபெற்ற போது அதில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலே அவர் இதனைத் தெரிவித்தார்.
அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்:

இன்று நாட்டில் ஆண்களுக்கு சரிசமனாக அனைத்து துறைகளிலும் இருந்து வருகின்றார்கள்,அது பொதுத்துறையாக இருக்கலாம்,சுகாதாரம்,கல்வி,மற்றும் நிர்வாகம் அனைத்து துறைகளிலும் பெண்களின் பிரதிநிதித்துவம் இருந்து கொண்டே இருக்கின்றது.
முன்னொரு காலத்தில் சிறுபான்மை பெண்களில் பங்கு பற்றல் ஈடுபாடுகள் மிகக் குறைவாகவே இருந்துள்ளது இனி வருகின்ற காலங்களில் அதிகரிக்குமே தவிர குறையாது,தற்போது நாட்டில் பெண்கள் பல்கலைக்கழகம் செல்லும் வீதம் கூட பெண்காளாகத் தான் இருந்து கொண்டு இருக்கின்றது.
பெண்களுக்களுக்கான சுயதொழிலுக்கான வசதி வாய்ப்புகள் அதிகரித்து ஏற்படுத்தப்படும் அதேபோன்று பெண்கள் சிறுவர்களுக்கான உரிமைகள் எதிர்கால ஜனாதிபதி சஜித் பிரேமதாஸவினால் கடுமையாக்கப்படலாம்.
கடந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களில் கூட பெண்களின் விகிதாசார பங்குபற்றல் இருபத்தைந்து வீதமாக்கப்பட்டது காரணம் பெண்களின் உரிமைகளும் பொறுப்புகளும் ஏற்றுக்கொள்ளப்படல் வேண்டும் அத்தோடு பெண்களின் குறைபாடுகளும் நிவர்த்திக்கப்படல் வேண்டும்.

நவம்பர் மாதம் 16 ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் நமது ஆதரவினை சிறப்பாக பயன்படுத்த வேண்டும் அத்தோடு மீண்டுமொரு இருண்ட யுகத்திற்கு வழிவகுக்க நாம் உடந்தையாக இருந்து விடக்கூடாது.
மூதூரில் பாரிய வீடமைப்பு திட்டங்களையும்,பாரிய அபிவிருத்திப்புரட்சிகளையும் எமதூ மக்களுக்காக மேற்கொண்டுள்ளோம் இச்செயற்பாடுகளுக்கு நன்றியுடையவர்களாக நாம் அனைவரும் செயற்பட வேண்டும் என்றார்.
இக் கூட்டத்தில் திருகோணமலை மாவட்ட ஐக்கிய தேசிய கட்சி அமைப்பாளர் சரத் லோரன்ஸ், மூதூர் பிரதேச சபை உறுப்பினர் ஏ.எம். அசாம் மௌலவி, ஐக்கிய தேசிய கட்சி முக்கியஸ்தர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -