உதுமாலெப்பை, ஜெமீல் உள்ளிட்ட பலர் முஸ்லிம் காங்கிரஸில் இணைவு!!!


ஸ்ரீ இலங்கை முஸ்லிம் காங்கிரஸின் ஊடாக தாங்களது அரசியல் ஆரம்பித்த எம்.எஸ்.உதுமாலெப்பை, ஏ.எம்.ஜெமீல் மற்றும் பஹீஜ் உள்ளிட்ட 200க்கு மேற்பட்டோர் இன்று முஸ்லிம் காங்கிரஸில் இணைந்துள்ளனர்.

தேசிய காங்கிரஸின் இணை ஸ்தாபகரும், அக்கட்சியின் தேசிய அமைப்பாளரும் கிழக்கு மாகாண சபையின் முன்னாள் அமைச்சருமான எம்.எஸ். உதுமாலெப்பை மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பிரதித் தலைவரும் கிழக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினருமான ஏ.எம். ஜெமீல் ஆகியோர் தங்களது ஆதரவாளர்கள் சகிதம் இன்று (16) தாருஸ்ஸலாமில் வைத்து, கட்சித் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் முன்னிலையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸில் மீள இணைந்துகொண்டனர்.
இவர்களுடன் சேர்ந்து தேசிய காங்கிரஸின் கொள்கை பரப்புச் செயலாளர் சட்டத்தரணி எம்.எம். பஹ்ஜி, பொத்துவில் அமைப்பாளர் ஏ. பதூர்கான், அம்பாறை மாவட்ட இளைஞர் அமைப்பாளரும் இறக்காமம் அமைப்பாளருமான எம்.எஸ்.எம். பரீட், அட்டாளைச்சேனை முன்னாள் பிரதி தவிசாளர் எம்.எஸ். ஜஃபர், மூதூர் பிரதேச அமைப்பாளர் நவாஸ், அரசியல் உயர்பீட உறுப்பினர் எம்.எல்.எம்.ஏ. காதர் மற்றும் நூற்றுக்கணக்கான ஆதரவாளர்கள் கட்சியில் இணைந்துகொண்டனர்.





எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -