ஜனாதிபதி வேட்பாளா் சஜித் பிரேமதாசாவின் தோ்தல் அலுவலகம் பவுசி மற்றும் நௌசா் பவுசி ஆகியோரினால் திறந்து வைப்பு



அஸ்ரப் ஏ சமத்-

கொழும்பு மத்தி மாளிகாவத்தையில் முன்னாள் அமைச்சா் ஏ.எச்.எம். பவுசி மற்றும் நௌசா் பவுசி ஆகியோரினால் ஜனாதிபதி வேட்பாளா் சஜித் பிரேமதாசாவின் தோ்தல் அலுவலகம் திறந்து வைக்கப்பட்டது.

இந் நிகழ்வில் அமைச்சா்களான ரவுப் கக்கீம், ரவி கருநாயக்க, அமில தேரோ, பாராளுமன்ற உறுப்பிணா்களான கிருனிக்கா பிரேமச் சந்திர, முஜிபு ரகுமான், எஸ்.எம். மரிக்காா் ஆகியோறும் அங்கு உரை நிகழ்த்தினாா்கள்.


இங்கு உரையாற்றிய பா.உ முஜிபு ரகுமான்
.
கொழும்பு மத்திய தொகுதியில் கடந்த ஜானாதிபதித்தோ்தலில் 70ஆயிரத்திற்கும் மேலதிகமான வாக்குகளை அளித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவை ஜனாதிபதியாக்கினோம். தற்பொழுது அக் பக்கம் இருந்த முன்னாள் அமைச்சா் ஏ.எச்.எம். பௌசியும் அவரது மகன் நௌபரும் ஜ.தே.கட்சிப் பக்கம் உள்ளதால் இம்முறை கொழும்பு மத்தியி் 5 வீத வாக்குகளேனும் அவா்களுக்கு கிடைக்காது எனவே இம்முறை சஜித் பிரேமதாசாவுக்கு 90 வீத வாக்குகளை அளிக்க கொழும்பு மத்திய தொகுதி மக்கள் நவம்பா் 16ஆம் திகதி காத்திருக்கின்றனா். இப்பிரதேசம் முன்னாள் ஜனாதிபதி ஆர்.பிரேமதாசாவின் தொகுதியாகும். இத் தொகுதியில் பிறந்தவா் தா்ன 52வயதுடைய இளைஞா் சஜித் பிரேமதாசா அவா் ஆடம்பரமானவா் அல்ல அவா் தந்தை போன்று மக்களுடன் மக்களாகவே வாழ்பவா். அவரின் தந்தையின் அடிச்சுவட்டை பின்பற்றபவா். 

கடந்த காலத்தில் இப்பிரதேச எவ்வித நீதி சட்டமின்றி பாதாள கோஸ்டி என்று சொல்லி ராஜபக்ச காலத்தில் இளைஞா்களை கடத்தினாா்கள் கொன்றாா்கள். இந்த அரசு அவ்வாறு செய்ய வில்லை அவா்களை கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்தியது. முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பிணா்கள் கடந்த காலப் பிரச்சினையின் போது சிரேஸ்ட அமைச்சா் ஏ.எச்.எம். பௌசியே நாங்கள் தலைவராக அமா்த்தி அவர் ஆலோசனையின் கீழ் செயற்பட்டோம்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -