சாய்ந்தமருது மாணவன் செரோன் அனஸ் அவர்களுக்கு சர்வதேச விருது...


எம்.ஐ.எம்.அஸ்ஹர்-
டந்த ஒக்டோபர் மாதம் 19 , 20 திகதிகளில் ஹில்டன் நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்ற NYMUN 2019 ( தேசிய இளைஞர் மாதிரி ஐக்கிய நாடுகள் சபை) விழாவில் General Assembly Third committee இல் அவுஸ்திரேலியா நாட்டின் பிரதிநிதியாக தனது ஆய்வை சமர்ப்பித்து விவாதங்கள், தீர்வுகளில் கலந்து கொண்ட சாய்ந்தமருதை பிறப்பிடமாக கொண்ட நூறுல் ஜின்னா செரோன் அனாஸ் இம்முறை" Best Novice Delegate " இற்குரிய விருதை பெற்று தனது ஊருக்கு பெருமை சேர்த்துள்ளார் .
இவரே இத்தகைய விருதை பெற்ற முதல் கிழக்கு மாகாண பிரதிநிதி ஆவார். இவர் தனது ஆரம்பக் கல்வியை சாய்டந்தமருது அல் ஜலால் வித்தியாலயத்திலும் உயர்கல்வியை உயிரியல் விஞ்ஞான பிரிவில் கல்முனை ஸாஹிரா தேசியக் கல்லூரியிலும் கற்று தற்போது ஜேனரல் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பை மேற் கொண்டு வருகின்றார்.
இந்த விழாவில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் சபாநாயகர் கரு ஜயசூரிய ஆகியோர் பிரதம அதிதிகளாக கலந்து கொண்டதோடு நாட்டில் சகல மாவட்டங்களையும் பிரதிநிதித்துவபடுத்தி 500 மேற்பட்ட இளைஞர் யுவதிகள் கலந்து கொண்டனர்.இவர் கல்விக்கு மேலதிகமாக பல இணைப்பாட விதான செயற்பாடுகளில் தேசிய மட்டத்தில் பல வெற்றிகளை பெற்றுள்ளார்.

இவர் சாய்ந்தமருது நூறுல் ஜின்னா , ஆமினா உம்மா தமபதிகளின் புதலர்வராவார்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -