பர்ஷாத் JP-
பாலமுனை ஜும்மா பெரிய பள்ளிவாசல் வளாகத்தில் இயங்கி வருகின்ற மஹாசினுல் உலூம் இஸ்லாமிய கல்லூரியில் அல் ஆலிம் கெளரவிப்பு நிகழ்வு, 9 ஆண்டு பூர்த்தி நிகழ்வு, பரிசளிப்பு நிகழ்வு என முப்பெரும் விழா 2019.10.10ஆம் திகதி வியாழக்கிழமை பிற்பகல் 4 மணியளவில் கல்லூரி முன்றலில் வெகு சிறப்பாக இடம்பற்றது.
கல்லூரியின் தலைவர் ஓய்வுபெற்ற உதவிக் கல்விப் பணிப்பாளர் அல்ஹாஜ் A. சாஹுல்ஹமீட் JP, பாலமுனை ஜும்மாபெரிய பள்ளிவாசல் தலைவர் MA. அன்சார் ஆசிரியர் ஆகியோர் முன்னிலையில் கல்லூரி அதிபர் அஷ்ஷேக் மெளலான மெளலவி AL. ஸாஜித் ஹூசையின் (பாகவி) BA Hons தலைமையில் இடம் பெற்ற இந் நிகழ்வில் பிரதம அதிதியாக வாழைச்சேனை நஹ்ஜதுல் இஸ்லாமிய அறபுக் கல்லூரி, காத்தான்குடி ஜாமிஅதுல் பலாஹ் அறபுக் கல்லூரி என்பவற்றின் அதிபர் அஷ்ஷேக் மெளலான மெளலவி AM. றஹ்மத்துல்லாஹ் (பலாஹி) அவர்களும் சிறப்பு சொற்பொழிவாளராக கொழும்பு தாருல் அர்கம் அறபுக் கல்லூரியின் பிரதி அதிபர் அஷ்ஷேக் மெளலான மெளலவி ஆஷிக் அபுல் ஹஸன் (றஸாதி) அவர்களும்
சிறப்பு விருந்தினர்களாக அட்டாளைச்சேனை பிரதேச சபையின் தவிசாளர் SMM.ஹனீபா JP, நுக்வோர் அதிகார சபையின் நிறைவேற்று பணிப்பாளர் சட்டத்தரணி MA.அன்சில், சிரேஷ்ட சட்டத்தரணி கலாநிதி ALA. கபூர், பாலமுனை SLMC அமைப்பாளர் AL.அலியார் உட்பட பலரும் அதிதிகளாக கலந்து சிறப்பித்தனர்.