களுவாஞ்சிகுடி உயர்தர கணிதபாட ஆசான் முத்தையா ஜெயாதி தனது 60 வயதில் ஓய்வு பெற்றார்.

அஸ்ஹர் இப்றாஹிம்-
ட்டிருப்பு மத்திய மகா வித்தியாலயம் ( தேசிய பாடசாலை ) களுவாஞ்சிகுடி உயர்தர கணிதபாட ஆசான் முத்தையா ஜெயாதி தனது 60 வயதில் ஓய்வு பெற்றார். இதனையொட்டி பாடசாலையில் பிரமாண்டமான முறையில் பாடசாலை அதிபர் கே.தம்பிராஜா தலைமையில் ஆசிரியர் நலன்புரி அமைப்பினால் பிரியாவிடை வைபமொன்று ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.
இந்நிகழ்வில் பிரதி அதிபர்கள் , ஆசிரியர்கள் , மாணவர்கள் , கல்விசாரா உத்தியோஸ்தர்கள் , அபிவிருத்தி உத்தியோஸ்தர்கள் கலந்து கொண்டனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் ஓந்தாச்சிமடம் பிரதேசத்தில் 1959 .8. 27ஆம் திகதி பிறந்தார். ஆரம்ப கல்வியை கண்டி தெல்தோட்டை தமிழ் மகா வித்தியாலயத்திலும் , ஆண்டு 3 தொடக்கம் 5 வரை ஒந்தாச்சிடம் ஸ்ரீவினாயகர் வித்தியாலத்திலும் , 6 தொடக்கம் உயர்தரம் வரை மட்டக்களப்பு சிவானந்தா தேசிய கல்லூரியிலும் பயின்றார்.
1979- 1980 ஆண்டுகளில் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் தனது பட்டப்படிப்பை சிறப்பாக மேற்கொண்டு விஞ்ஞானமானி பட்டத்தைப் பெற்றுக் கொண்டார். தனது கணிதத்திறமையை வெளிக்காட்ட 1984.4.16 பதுளை சரஸ்வதி மகா வித்தியாலயத்தில் முதல் நியமனம் பெற்று 5 வருடங்கள் சேவையாற்றினார். 1989 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் யாழ்ப்பாணம் துரையப்பா மகா வித்தியாலயத்தில் 3 வருடங்களும் 1999 மே மாதம் முதல் கல்முனை கார்மல் பாத்திமா கல்லூரியில் 26 வருடங்களும் 2001 - 2014 வரை அக்கல்லூரியில் விஞ்ஞான கணிதத்துறை பகுதித்தலைவராகவும் ,2014 - 2018 அட்டாளைச்சேனை முஸ்லிம் மத்திய மகா வித்தியாலயத்திலும் 2018 ஜனவரி மாதம் தொடக்கம் ஓய்வு பெறும் வரை பட்டிருப்பு மத்திய மகா வித்தியாலயம் ( தேசிய பாடசாலை ) களுவாஞ்சிபுடியிலும் தனது ஆசிரியர் பணியினை மேற்கொண்டிருந்தார்.

35 வருடங்கள் ஆசிரியராக பணிபுரிந்த முத்தையா ஜெயாதி ஆசிரியர் சீரும் சிறப்பும் பெற்று வாழ அனைவரும் வாழ்த்து தெரிவித்தனர்.








இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -