ஆதிப் அஹமட்-
மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்திற்குற்பட்ட காத்தான்குடி கல்விக்கோட்டத்திலுள்ள பாடசாலைகளுக்கிடையிலான பாலர் மெய்வல்லுனர் விளையாட்டு விழா இன்று ஆரம்பமானது.
காத்தான்குடி கோட்டக்கல்விபணிப்பாளர் ஏ.ஜீ.எம்.ஹக்கீம் தலைமையில் இடம்பெற்ற இந்த ஆரம்ப விழாவில் மட்டக்களப்பு மத்தி வலயக்கல்விப்பணிப்பாளர் Dr.SMMS.உமர் மௌலானா பிரதம அதிதியாக கலந்து கொண்டு நிகழ்வுகளை ஆரம்பித்து வைத்தார்.இவ்விளையாட்டு நிகழ்வு இன்றும்(11) நாளையும் இடம்பெறவுள்ளது.
இந்நிகழ்வில் மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தின் நிர்வாக உத்தியோகத்தர் ஆதம்லெப்பை,விளையாட்டுக்கு பொறுப்பான உதவிக்கல்விப்பணிப்பாளர்களான முதர்ரிஸ்,நஸீர்,ஆரம்பக்கல்வி உதவிக்கல்விப்பணிப்பாளர் இப்ராஹிம்,பாலர் விளையாட்டுக்கு பொறுப்பான இணைப்பாளர் இனாமுல்லாஹ்,ஆசிரிய ஆலோசகர்களான நவாஸ்,அலாவுதீன் உற்பட பலரும் கலந்து சிறப்பித்தனர்.