கைத்தொழில் பேட்டைகள் ஒரு பிரதேசத்திற்கு மாத்திரம் வரையறுக்கப்பட மாட்டாது. பிரதேச செயலாளர் பிரிவுகளில் இளைஞர்களுக்கு கூடுதலான தொழில் வாய்ப்புக்களை வழங்குவது இதன் நோக்கமாகும். கைத்தொழில் பேட்டைகளினால் தேசிய பொருளாதாரத்திற்கும், மொத்தத் தேசிய உற்பத்திக்கும் கூடுதலான பங்களிப்பு கிடைக்கும்.
வடமாகாண மக்களை விரிவான அபிவிருத்தி செயற்பாடுகளில் இணைத்துக் கொள்ள எதிர்பார்ப்பதாகவும் அமைச்சர் கூறினார். யாழ் வலிகாமம் பிரதேசத்தில் அமைக்கப்பட்டுள்ள 274ஆவது மாதிரிக் கிராமத்தை திறந்து வைக்கும் நிகழ்வில் அமைச்சர் உரையாற்றும் போதே இதனை தெரிவித்தார்.
இதேவேளை, பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கும், அமைச்சர் சஜித் பிரேமதாஸவுக்கும் இடையிலான பேச்சுவார்த்தை அலரி மாளிகையில் நேற்று இடம்பெற்றது. சாதகமான பெறுபேறுகளை விரைவில் காண முடியும் என்று பேச்சுவார்த்தையின் பின்னர் கருத்து வெளியிட்ட அமைச்சர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.