அமைச்சர் மனோ கணேஷனின் வழிகாட்டலில் அம்பாறை மாவட்ட தமிழ் பேசும் ஊடகவியலாளர்களுக்கான இலவச சிங்கள மொழி கற்கை

எம்.என்.எம்.அப்ராஸ்-

தேசிய ஒருமைப்பாடு அரச கரும மொழிகள் ,சமூக மேம்பாடு மற்றும் இந்து சமய விவகார அமைச்சர் மனோ கணேஷனின் வழிகாட்டலில் அம்பாறை மாவட்ட தமிழ் பேசும் ஊடகவியலாளர்களுக்கான இலவச சிங்கள மொழி கற்கை நெறி நிந்தவூர் பிரதேச சபை கூட்ட மண்டபத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை ( 08.09.2019) தொடக்கம் 19.09.2019ம் திகதி வரை தொடர்ச்சியாக 12 நாட்கள் இடம்பெறவுள்ளது.

சிலோன் மீடியா போரத்தின் கோரிக்கைக்கு அமைய இக்கற்கை நெறியினை அம்பாறை மாவட்ட ஊடகவிலாளர்களுக்கு வழங்குவதற்கு , அமைச்சரின் அம்பாறை மாவட்ட இணைப்பாரும் ஸ்மார்ட் ஒப் ஸ்ரீலங்கா அமைப்பின் தலைவர் கே.எம்.ரிஸ்கான் முகம்மட் முன்னெடுத்திருந்தார்.

இந்நிகழ்வில் அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க. அதிபர் வி.ஜெகதீஸன் அம்பாறை மாவட்ட கட்டடங்கள் திணைக்களத்தின் பிரதம பொறியலாளர் ஏ எம் .ஸாஹிர்சிலோன் மீடியா போரத்தின் தலைவர் றியாத் ஏ மஜீத் மாவட்ட தமீழர் ஊடக மையத்தின் தலைவர் ரீ.தர்மேந்திரா சிலோன் மீடியா போரத்தின் செயலாளர் எ.எஸ்.எம் முஜாஹீத் நுஜா ஊடக ஒன்றிய செயலாளர் பைசல் இஸ்மாயில் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -