தமிழர் பாரம்பரிய மற்றும் நவீன கலைகள் - கலைஞர்களுக்கான அரச விருது வழங்கும் விழா – 2019'


222 கலைஞர்கள் பொற்கிழி விருதுகள் வழங்கி கௌரவிப்பு:
காரைதீவு நிருபர் சகா-
ந்துசமயவிவகார அமைச்சின் இந்துகாலாசாரத்திணைக்களம் முதன்முதலாக நடாத்தும் 'தமிழர் பாரம்பரிய மற்றும் நவீன கலைகள் - கலைஞர்களுக்கான அரச விருது வழங்கும் விழா – 2019' நேற்று (2) திங்கள் மாலை கொழும்பு தாமரைத்தடாகத்தில் வெகு சிறப்பாக நடைபெற்றது..

இந்துசமயஅலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் அருளானந்தம் உமாமகேஸ்வரன் வரவேற்புரையாற்றினார். அமைச்சர் மனோகணேசன் பிரதமஅதிதியாகக்கலந்துகொண்டு கலைஞர்களை கௌரவித்தார்.இ.கி.மிசன் இலங்கைக்கான தலைவர் சுவாமி அக்சராத்மான்ந்தா ஜீ பேராசிரியர் சோ.சந்திரசேகரம் பாராளுமனற் உறுப்பினர்களான வேலுகுமார் அரவிந்தகுமார் ஆலோசகர் உடுவை தில்லைநடராஜா உள்ளிட்ட பிரபலங்கள் பரிசளிப்புவிழாவில் பங்கேற்றனர்.
இடையிடையே கண்கவர் கலைநிகழ்ச்சிகள் மேடையேறி அனைவரையும் பிரமிப்பில் ஆழ்த்தியது. ஸ்ருதி பிரபாவின் இசையில் ஈழத்துப்பாடல்கள் பாடப்பட்டன. பின்னணியில் நான் உங்கள் தோழன் வாடைக்காற்று புதியகாற்று போன்ற படங்கள் காணொளியில் திரையிடப்பட்டன. தமிழ்க்லையுலகின் முன்னோடிகள் பலரின் படங்கள் காணொளியில் திரையிடப்பட்டன. தம்பிஜயாதேவதாஸ் தொகுத்த ஈழத்துத்திரைப்படங்களின் தொகுப்குமட்ம் தரையிடப்பட்டது.

தேசிய ஒருமைப்பாடு அரச கரும மொழிகள் சமூக மேம்பாடு மற்றும் இந்து சமய விவகார அமைச்சர் மனோ கணேசனின் வழிகாட்டலின் கீழ் இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களம் இவ்விருதுவழங்கும் விழாவை ஏற்பாடு செய்திருந்தது.சுமார் ஒருமணிநேரம் தாமதித்து ஆரம்பித்தபோதிலும் 5மணிநேரம் இவ்விழா சிறப்பாக இடம்பெற்றது.

தமிழர்தம் பாரம்பரிய மற்றும் நவீன கலைகளைத் தனியே பேணிப் பாதுகாத்து ஊக்குவித்துத் தம் வாழ்நாளிற் பெரும் பகுதியை இக் கலைகளுக்காகவே அர்ப்பணித்து வாழுகின்ற கலைஞர்களை அங்கீகரித்தும் வளரும் இளங் கலைஞர்களை ஊக்குவித்தும் 'தமிழர் பாரம்பரிய மற்றும் நவீன கலைகள் - கலைஞர்களுக்கான அரச விருது வழங்கும் விழா – 2019' எனும் பெயரில் நடாத்தப்படுவதாக திணைக்களத்தின் பணிப்பாளர் அருளானந்தம் உமாமகேஸ்வரன் தெரிவித்தார்.

இவ்வஜழாவில் மூத்த கலைஞர்கள், நின்று நிலைக்கும் சேவையை இன்றும் வழங்கும் கலைஞர்கள், வளரும் இளம் கலைஞர்கள் என்ற அடிப்படையிலே கலைஞர்களுக்குக் கலையரசு விருது கலைமாமணி விருது, கலைச் சுடர் விருதுஇ கலை இளவரசன் கலை இளவரசி விருது என விருதுகள் வழங்கி 222 கலைஞர்கள் கௌரவிக்கப்பட்டனார்.
இந்த 210கலைஞர்களோடு மேலும் 12வாழ்நாள் சாதனையாளர்களும் கௌரவிக்கப்பட்டனனர்.வாழ்நாள்ள்சாதனையாளர்கள் பெரும்பாலும் நடைதளர்ந்தநிலையிலும் ஊன்றுகோலிலும் சிரமத்தின்மத்தியில் மேடையேறி விருது பெற்றமை பலரையும் நெகிழச்செய்தது.

அமைச்சர் மனோகணேசன் பேசுகையில்:
இந்த நாட்டில் வாழும் தமிழ் கலைஞா்கள் உரிய இடம் பெரும்பான்மையினத்திடமிருந்து அங்கீகாரம் கிடைப்பது இல்லை. நானும் ஒரு கலைஞன். எனது தந்தை ஒரு நடிகன். ஆகவேதான் இந்த நாட்டில் வாழும் தமிழ் கலைஞா்களுக்கு எனக்கு ஒப்படைக்கப்பட்ட அமைச்சின் இந்து கலாச்சார திணைக்களத்தின் ஊடாக இவ் ஆண்டில் இருந்து 220 முத்த இளம் கலைஞா்களை அழைத்து வந்து அரச விருது வழங்கி பணமும் வழங்கி கௌரவிப்பது எனது கடமை. இதனையிட்டு நான் மிக்க மகிழ்சியடைகின்றேன். இதற்குப் பிறகு எந்தவொரு அமைச்சரும் இந்து கலாச்சார திணைக்களத்தினை பாரமெடுத்தாலும் இந்த பணி ஒவ்வொரு வருடமும் தொடரப்பட்டு இந்த முறை பின்பற்றப்படல் வேண்டும். என உரிய திட்டத்தினை அமைச்சின் ஊடாக வகுத்துள்ளேன்.
புலம்பெயர் தமிழர்கள் இந்திய கோடம்பாக்க திரையுலகிற்கு கூடுதல் உதவி நல்குவதைப்போல தாம் பிறந்த தாய்நாட்டையும் எமது கலைஞர்களையும் நேசிப்பீர்கள். எதிர்காலத்தில் அவர்களுக்கு உதவவேண்டுகிறேன். நிச்சயம் இப்பணியை பிரதிவருடமும் முன்கொண்டுசெல்ல உங்களின் மேலான உதவியை எதிர்பார்க்கின்றேன்.
வருவது தேர்தல் . நிச்சயம் நாம் மீண்டும் வருவோம். நானும் அமைச்சராவேன். நான்வந்தாலும் வராவிட்டாலும் இந்த விருதுவழங்கும் விழா தொடரவேண்டும். அதற்கு இன்றைய பிள்ளையார் சதுர்த்தி தினத்தில் பிள்ளையார்சுழி போடப்பட்டுள்ளது. எனத் தெரிவித்தாா்.







இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -