அம்பாரை மாவட்ட ஜம்இய்யதுல் உலமாவின் ஊடக அறிக்கை..

பாறுக் ஷிஹான்-

ண்மையில் நமது நாட்டில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலையினைத் தொடர்ந்து எமது முஸ்லிம் பாராளுமன்ற
உறுப்பினர்கள் அமைச்சர்கள் மற்றும் ஆளுநர்கள் ஒற்றுமையாகச் செயற்பட்டு முஸ்லிம் சமூகத்தின் பாதுகாப்புக்கு
உறுதுணையாக திகழ்ந்தமையை அம்பாரை மாவட்ட ஜம்இய்யதுல் உலமா வெகுவாக பாராட்டுவதாக அதன் செயலாளர் அஷ்ஷெய்க் ஏ.எல்
நாஸிர்கனி (ஹாமி) தெரிவித்துள்ளார்.

உண்மையில் முஸ்லிம் சமூகத்துக்கு இக்கட்டான நிலை ஏற்பட்ட போது ஒற்றுமையாகச் செயற்பட்டு தமது பதவிகளைத் துறந்து
நாட்டுக்கும் சர்வதேசத்துக்கும் நற்செய்தியை பறைசாற்றிய அரசியல்வாதிகளை பாராட்டாமல் இருக்கமுடியாது.

அரசியல்வாதிகளிடம் நிலவும் இவ்வொற்றுமை தொடர்ந்தும் நீடிக்க பிரார்த்திப்பதாக தெரிவித்துள்ள செயலாளர்
முஸ்லிம் சமூகத்தின் உரிமைக்காக கருத்தொருமித்துச் செயற்படவேண்டுமெனவும் எதிர்காலத்தில் நடைபெறவுள்ள
தேர்தல்களின் போது இதே ஒற்றுமையைக் வெளிப்படுத்தி முஸ்லிம் சமூகத்தின் முன்னேற்றத்துக்கும் சுபீட்சத்துக்கும்
பாடுபட வேண்டு எனவும் கேட்டுக்கொண்டர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -