குளவியால் ஏற்பட்ட விபரீதம் - விடுதி முற்றாக எரிந்து நாசம்...


க.கிஷாந்தன்-

100 வருடம் பழமை வாய்ந்த நோர்வூட் கிளங்கன் பகுதியில் அமைந்துள்ள சுற்றுலா விடுதி ஒன்றில் (லோவர் கிளங்கன் பங்களோ) ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் குறித்த விடுதி முற்றாக எரிந்து நாசமாகியுள்ளதாக நோர்வூட் பொலிஸார் தெரிவித்தனர்.

நோர்வூட் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அட்டன் – பொகவந்தலாவ பிரதான வீதியின் எல்லையில் டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலைக்கு முன்னால் அமைந்துள்ள குறித்த விடுதியே இவ்வாறு 08.08.2019 அன்று மாலை 6.30 மணியளவில் தீடிரென தீப்பற்றி எரிந்துள்ளது.

ஆங்கிலேயரின் ஆட்சி காலத்தில் இந்த விடுதி கிளங்கன் தேயிலை தோட்டத்தின் தோட்ட முகாமையாளரின் உத்தியோகபூர்வ இல்லாமாக பயன்படுத்தப்பட்டது. பின்னர் இது ஒரு விடுதியாக பயன்படுத்தப்பட்டது.

இலங்கை வங்கியின் கீழ் உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் விடுதியாக தற்போது பயன்படுத்தப்பட்டு வந்தது. மேற்படி கட்டிடத்தின் தரை மற்றும் கூரைகள் அழகான மரப்பலகைகளை கொண்டு அலங்கரிக்கப்பட்டிருந்தது.

08.08.2019 அன்று மாலை குறித்த கட்டிடத்தின் கூரை பகுதியில் கட்டப்பட்டிருந்த குளவி கூட்டை ஊழியர்கள் தீ யிட்டு எரிக்க முயற்சித்த வேளையில் குறித்த தீ கட்டிடத்தின் மீது பரவலாக பரவி முற்றாக எரிந்து சாம்பலாகியுள்ளது.

எனினும் குறித்த விடுதியிலிருந்து சில தளபாடங்கள் மற்றும் தீக்கிரையாகாமல் மீட்கப்பட்டுள்ளன.

அதன் பிறகு அட்டன் டிக்கோயா நகர சபையின் தீயணைப்பு பிரிவினர் எரிந்துக் கொண்டிருந்த குறித்த விடுதியை முற்றாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.

இச்சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை நோர்வூட் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -