திருகோணமலை மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தோப்பூர் சின்னக் கலுவான் பாலத்தின் கீழிருந்து இன்று (27) பிற்பகல் 1.30 மணியளவில் வெடிபொருள்கள் சில மீட்கப்பட்டுள்ளதாக மூதூர் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
குறித்த பாலத்தின் கீழ் மீன்பிடியில் ஈடுபட்ட மீனவர் ஒருவர் மேற்படி வெடிபொருள்களைக் கண்டு அரச புலனாய்வுப் பிரிவினருக்கு வழங்கிய இரகசியத் தகவலின் அடிப்படையில் மூதூர் பொலிஸாரால் மேற்படி வெடிபொருள்கள் மீட்கப்பட்டுள்ளன.
இதன்போது 02 கைக் குண்டுகள் ,ரி56 ரகத் துப்பாக்கி ரவைகள் 15 என்பன மீட்கப்பட்டுள்ளதாக மூதூர் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
குறித்த வெடிபொருள்கள் நீதிமன்றத்தின் அனுமதியுடன் விசேட அதிரடிப்படையின் உதவியுடன் செயலிழக்கச் செய்யப்படவுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

