அரச பொது நிருவனங்கள் தொடர்பான பாராளுமன்ற ஆய்வுக் குழுவின் நடவடிக்கைகளை (கோப் குழு ) பார்வையிடுவதற்கு ஊடகங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
நாளை முதல் அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக சபாநாயகர் கருஜயசூரிய தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றம் இன்று சபாநாயகர் அறிவிப்பு நேரத்தின் போது இது தொடர்பாக சபாநாயகர் கருஜயசூரிய அறிவிப்பொன்றை விடுத்தார். இதன்போது அவர் குறிப்பிடுகையில்,
அரச பொது நிருவனங்கள் தொடர்பான பாராளுமன்ற ஆய்வு குழு அறையில் பொறுத்தப்பட்டுள்ள ஒளிபரப்பு தன்மையுடன் கூடிய கமரா கட்டமைப்பை ஒப்படைக்கும் நிகழ்வு நாளை வெள்ளிக்கிழமை பிற்பகல் 2 மணி முதல் 2.30 வரையில் நடத்தப்படவுள்ளது.
இதில் கலந்துக்கொள்ளுமாறு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அறிவிப்பு விடுக்கின்றேன். இதேவேளை
இந்த விடயத்தில் ஊடகங்கள் பொறுப்பு தன்மையுடன் நடந்துக்கொள்ளுமென நான் நம்புகின்றேன். பாராளுமன்றத்தின் செயற்பாடுகளின் அடுத்தக் கட்ட நடவடிக்கையாக இந்த வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது என அவர் தெரிவித்தார்.வீரகேசரி