உயிர்த்த ஞாயிறு தினத்தாக்குதல்களுக்கு முஸ்லிம்கள் பொறுப்புக்கூறத் தேவையில்லை




கட்டுவாப்பிட்டியவில் பேராயர் மல்கம் ரஞ்ஜித்

மினுவாங்கொடை நிருபர்-
யிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல்களுக்கு முஸ்லிம்கள் எவரும் பொறுப்புக் கூறத்தேவையில்லை. இவ்வாறு இருக்க, முடிவுகளை எடுக்க முடியாத முதுகெலும்பற்ற தலைவர்கள் ஆட்சிப் பொறுப்பை செய்யக் கூடியவர்களிடம் உடனடியாகக் கையளித்துவிட்டு வீடு செல்ல வேண்டும் என, பேராயர் மல்கம் ரஞ்ஜித் தெரிவித்தார்.
நீர்கொழும்பு, கட்டுவாப்பிட்டிய தேவாலயத்தில், (21) ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஆராதனையின் பின்னர் ஆற்றிய உரையிலேயே, பேராயர் மல்கம் ரஞ்ஜித் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் அங்கு மேலும் கருத்துத் தெரிவிக்கும்போது, உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல்களுக்கு முஸ்லிம் மக்கள் எவரும் பொறுப்புக் கூறத் தேவையில்லை.அது அரசின் பொறுப்பற்ற தன்மையால் நடந்தது.
உலக நாடுகளின் இருப்புக்காக, அவர்களின் சதிகளில் எமது நாடு சிக்கிக் கொண்டது.
புலனாய்வுத் தகவல்கள் கிடைத்தும் அரசு உரிய நடவடிக்கைகளை எடுக்கவில்லை. ஆதாரங்கள் இருந்தும் சம்பந்தப்பட்டவர்களை கைது செய்ய முடியாமற் போய்விட்டது. முதுகெலும்பில்லாத தலைவர்கள் இருப்பதே இதற்குக் காரணம் .
வழி தவறிய இளைஞர்களைப் பிடித்துக் கொண்டு சர்வதேச நாடுகள் சில, தமது நோக்கை அடையச் செய்த சதியின் விளைவே இத் தாக்குதல்.
வெளிநாட்டுச் சக்திகள் இங்கு தலைதூக்க இடமளிக்க முடியாது. அந்தச் சக்திகளின் சொல் கேட்டே, நாட்டின் புலனாய்வுத்துறையை அரசு முடக்கியது. என்றார்.
குண்டுத் தாக்குதலுக்கு இலக்கான நிலையில் புனரமைக்கப்பட்ட நீர்கொழும்பு, கட்டுவாப்பிட்டிய தேவாலயம், (21) ஞாயிற்றுக்கிழமை திறந்து வைக்கப்பட்டது.
குறித்த குண்டுத் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்காக விசேட ஆராதனைகளும் நடாத்தப்பட்ட நிலையில், மக்களுக்கான நிவாரணத் திட்டங்களும் மீண்டும் இத்தேவாலயத்தில் ஆரம்பிக்கப்பட்டன.
உயிர்த்த ஞாயிறு தினமான கடந்த ஏப்ரல் 21 ஆம் திகதி இடம்பெற்ற தீவிரவாதத் தாக்குதலில், கட்டுவாப்பிட்டிய தேவாலயமும் இலக்கானமை குறிப்பிடத்தக்கது.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -