திருகோணமலை மாவட்டம் தம்பலகாமம் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் வறுமைக் கோட்டின் கீழ் வாழ்ந்து வரும் தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கான இலவச மின் இணைப்பு வழங்கும் நிகழ்வு இன்று (17) மீரா நகர் பொது விளையாட்டு மைதானத்தில் வைத்து வழங்கி வைக்கப்பட்டன.
குறித்த மின் இணைப்புக்கான கட்டணம் செலுத்தப்பட்ட பத்திரங்களை திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அப்துல்லா மஃறூப் வழங்கி வைத்தார்.
மின்சாரமின்றி இருளில் வாழ்ந்து வந்த சுமார் 45 தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு பாராளுமன்ற உறுப்பினர் அப்துல்லா மஃறூப் அவர்களின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் வழங்கி வைக்கப்பட்டன.
இக் குறித்த நிகழ்வில் தம்பலகாம பிரதேச சபை உறுப்பினர்களான தாலிப் அலி ஹாஜியார், ஆர்.எம்.றஜீன், கிண்ணியா நகர சபை உறுப்பினர் நிஸார்தீன் முஹம்மட், முன்னால் தம்பலகாம பிரதேச சபை தவிசாளர் வாகிட், நாடாளுமன்ற உறுப்பினரின் இணைப்பாளர் ஈ.எல்.அனீஸ் உட்பட பயனாளிகள் கட்சி ஆதரவாளர்கள் என பலர் கலந்து கொண்டார்கள்.
