பேரம் பேசும் அரசியலில் தோற்றுப் போயுள்ள முஸ்லீம் அரசியல் ரணில் முஸ்லீம் எம்பிக்களை ஏமாற்றியுள்ளாரா...?




றனூஸ் முகம்மட் இஸ்மாயில்-
டந்த பதினோராம் திகதி கல்முனைப் பிரமுகர்களான சட்ட முதுமாணி வை எல் எஸ் ஹமீத் , சட்டத்தரணி ஹாலிக் ,சட்டத்தரணி யூசுப் அஸ்பாக், சட்டத்தரணி ரஸ்ஸாக்,தொழிலதிபர் சித்தீக், ஊடகவியலாளர் றிப்தி அலி உள்ளிட்ட மிகவும் முக்கியமான ஒரு குழு கல்முனை மாநகருக்கு எழுந்துள்ள ஆபத்துக்களை விவரித்து அதனைத் தவிர்க்கும் முகமாக ஆலோசிப்பதற்கு ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் அவர்களை சந்திக்கிறது.
அதன் பின்னர் முஸ்லீம் பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரையும் சந்தித்து இது குறித்து விரிவான விளக்கம் ஒன்றை முன்வைத்து கல்முனை மாநகரம் கபளீகரம் செய்யப்படுவதை அனுமதிக்க முடியாது என்பதற்கான நியாயங்களைக் கூறி முடித்தனர்.
அதன் பின்னர் ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் தலைவர் சகிதம் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவர்களை சந்தித்து அவரிடம் தமது பக்க நியாயங்களைக் கூறி முடித்த பின்னர் கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்துக்கான கணக்காளர் வெற்றிட உருவாக்கமும் நியமனமும் எந்தக் காரணம் கொண்டும் உருவாக்கப்பட மாட்டாது என உறுதியளித்தார்.

அன்று இரவு குறித்த உப பிரதேச செயலகத்துக்கான நிரந்தரக் கணக்காளர் வெற்றிடம் உருவாக்கப்பட்ட ஆவணங்களை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் அவர்களால் முகநூலில் பகிரப்பட்டிருந்தது.
கல்முனை மாநகரம் கபளீகரம் செய்யப்படுவதை எந்தக் காரணம் கொண்டும் ஏற்க முடியாது என்பதே யதார்த்தமாகும்.

முஸ்லீம் தேசியத்தின் அடையாளமாகத் திகழ்ந்து கொண்டிருக்கும் கல்முனை மாநகரத்தை தாரை வார்ப்பதென்பது நமது அரசியலின் இயலாமை என்பதைத் தவிர என்னவென்று சொல்வது...?
பிரதமர் விக்கிரம சிங்க அன்று மாலை 6.30 மணிக்கு வாக்களித்த விடையம் அதே இரவு எட்டு மணிக்கு அவராலே மீறப்பட்டிருக்கிறது என்பது எதனைக் காட்டுகிறது...?
தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் கோரிக்கைக்கு செவி சாய்த்த பிரதமர் முஸ்லீம் எம் பி க்களின் கோரிக்கைக்கு செவி சாய்க்காதது ஏன் ...?

இது குறித்து ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் அவர்கள் மிகவும் காட்டமான எதிர்ப்பினை இந்த அரசாங்கத்துக்குத் தெரிவிக்க வேண்டியது அவசியமாகும்.
சுமார் பத்து வருடங்களாக எதுவித எல்லை முரண்பாடுமின்றி இயங்கி வருகின்ற தோப்பூர் உப பிரதேச செயலகத்தை தரமுயர்த்தும் அமைச்சரவைப் பாத்திரத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அழுத்தத்தினால் இடைநிறுத்திய இந்த அரசாங்கத்துக்கு எதிரான பதிவு செய்ய வேண்டியது ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரசின் மீதுள்ள தார்மீகப் பொறுப்பாகும்.
கல்முனை மற்றும் தோப்பூர் மக்களின் அபிமானம் பெற்ற அரசியல் கட்சி என்பதற்கு அப்பால் தார்மீக பொறுப்புள்ள நமது தாய் அரசியல் கட்சியாக மாத்திரமின்றி இன்றய ரணில் அரசாங்கத்தின் ஆகப்பெரிய முஸ்லீம் பங்காளிக்க காட்சியாகவுள்ள நிலைமையின் அடிப்படையில் ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் மிகவும் காட்டமான எதிர்ப்பினைத் தெரிவிக்க வேண்டும்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -