அம்பாறை மாவட்டத்தில் உள்ள வறிய குடும்பங்களுக்கான உலருணர்வு வழங்கும் நிகழ்வு

பாறுக் ஷிஹான்-
குவைத் நாட்டின் செம்பிறை சங்கத்தின் அணுசரனையுடன் அம்பாறை மாவட்டத்தில் உள்ள வறிய குடும்பங்களுக்கான உலருணர்வு வழங்கும் நிகழ்வு சாய்ந்தமருது வரவேற்பு மண்டபத்தில் இடம்பெற்றது.

சனிக்கிழமை(13) காலை 9 மணியளவில் ஆரம்பமான குறித்த நிகழ்வில் 3000 ரூபா பெறுமதியான உலர் உணவுப் பொருட்களை 215 குடும்பங்கள் பெற்றுக்கொண்டன.
இவ்வுலருணர்வு பொருட்கள் யாவும் அம்பாறை மாவட்டத்தின் கல்முனை சம்மாந்துறை மத்தியமுகாம் சவளைக்கடை பொலிஸ் பிரிவுகளில் உள்ள வருமானம் குறைந்த குடும்பங்களை பொலிஸார் மற்றும் கிராம சேவகர்களுடாக பெற்றுக்கொண்ட தகவலின் அடிப்படையில் பயனாளிகள் தெரிவு செய்யப்பட்டனர்.
இந்நிகழ்வில் அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் ஏ.ஜெகதீசன் இலங்கை செஞ்சிலுவை சங்கத்தின் அம்பாறை கிளையின் தலைவர் சட்டத்தரணி சுனில் திஸாநாயக்க அதன் செயலாளர் ஜெயகணேஸ் கல்முனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கே.எச் சுஜீத் பிரியந்த பொலிஸ் பரிசோதகர் சத்துரசிங்க இலங்கை செஞ்சிலுவை சங்கத்தின் தலைமை காரியாலய உதவி நிகழ்ச்சி திட்ட முகாமையாளர் ( அனர்த்த முகாமைத்துவ பிரிவு)சுமித்த சாணக இலங்கை செஞ்சிலுவை சங்க அம்பாறை மாவட்ட கிளை நிறைவேற்று உத்தியோகத்தர் சந்திரிக்கா அபேசேகர ஆகியோர் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு உலர் உணவு பொருட்களை வழங்கி வைத்தனர்.












இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -