வினாப்பத்திரத்தில் குளறுபடி : சகல தமிழ் மொழிமூல விண்ணப்பதாரிகளையும் நேர்முகப்பரீட்சைக்கு அழைக்குமாறு பணிப்புரை


நுஸ்கி முக்தார்-
மேல்மாகாண பட்டதாரி ஆசிரியர் நியமனத்துக்கான தமிழ் மொழிமூல போட்டிப்பரீட்சைக்கு தோற்றிய சகல விண்ணப்பதாரிகளையும் நேர்முகப்பரீட்சைக்கு அழைப்பு விடுக்குமாறு மேல்மாகாண ஆளுநர் ஏ.ஜே.எம். முஸம்மில் மேல்மாகாண அரச சேவை ஆணைக்குழுவுக்கு பணிப்புரை வழங்கியுள்ளார்.
மேல் மாகாண கல்வி அமைச்சின் கீழ் உள்ள பாடசாலைகளில் காணப்படும் ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்புவதற்கு பட்டதாரிகளை இணைத்துக்கொள்ளும் போட்டிப் பரீட்சை கொழும்பு, களுத்துறை, கம்பஹா மாவட்டங்களிள் கடந்த ஜூன் 30ஆம் திகதி இடம்பெற்றது.

இப்பரீட்சையில் தமிழ் மொழிமூல பரீட்சை வினாப்பத்திரத்தில் குளறுபடிகள் காணப்பட்டதாக வந்த முறைப்பாடுகள் தொடர்பில் ஆளுநரின் கவனத்துக்கு கொண்டுவரப்பட்டதை அடுத்தே இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, குறித்த நேர்முகப்பரீட்சைகளை எதிர்வரும் ஆகஸ்ட் மாதத்தில் நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ளதாகவும் முதற்கட்டமாக சுமார் 250 பட்டதாரிகளை இணைத்துக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் மேல்மாகாண ஆளுநர் ஏ.ஜே.எம். முஸம்மில் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -