கல்முனைக்கு அதிகார பூர்வமான நிரந்தர கணக்காளர் நியமனம்?

இரவோடிரவாக மக்கள் வெடிகொழுத்தி மகிழ்ச்சி ஆரவாரம்.
காரைதீவு நிருபர் சகா-
ல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்திற்கு வரலாற்றில் முதல் தடவையாக அதிகாரபூர்வமான நிரந்தரக்கணக்காளர் ஒருவர் நேற்று நியமிக்கப்பட்டுள்ளார் எனத் தெரிகிறது.
இச்செய்தியை ந இரவு கேள்விப்பட்டதும் கல்முனை வாழ் தமிழ் இளைஞர்கள் வீதிகளில் பட்டாசு வெடிக்கவைத்து தமது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
கல்முனை வடக்கு உபபிரதேச செயலகத்திற்கு முழு அதிகாரம் கொண்ட கணக்காளர் ஒருவரை நியமிக்க திறைசேரி செயலாளர் அனுமதி வழங்கப்பட்டு நேற்ற (11) மாலை 6.00 மணிக்கு பொதுநிர்வாக அமைச்சின் செயலாளர் அனுமதியுடன் உத்தியோக பூர்வ நியமனக்கடிதம் வழங்கப்பட்டுள்ளதாக அறியமுடிகிறது.
தமிழ்தேசிய கூட்டமைப்பு மேற்கொண்ட தொடர் அழுத்தம் காரணமாகவே பிரதமர் ரணிலுடனான சந்திப்பின் பின் இந்த விடயம் கைகூடியுள்ளது.

பிரதமர் ரணிலுடனான த.தே.கூட்டமைப்பின் சந்திப்பு நேற்ற (11) மாலை 5மணியளவில் வாக்கெடுப்புக்கு முன்னதாக இடம்பெற்றது. இதன்போது நிதியமைச்சர்மங்களசமரவீரவும் உள்ளநாட்டலுவல்கள் அமைச்சர் வஜிரஅபேவர்த்தனவும் உடனிருந்தனர்.
உடனடியாக கல்முனைக்கு நிரந்துர கணக்காளர் நியமிப்பதற்கு பிரதமர் இரு அமைச்சுகளின் செயலாளர்களுக்கும் உத்தரவிட்டார். எனினும் தனியான வங்கிக்கணக்கு திறப்பதற்க திறைசேரி செயலாளரின் அனுமதி தேவைப்பட்டது. உடனே நிதியமைச்சர் மங்கள நடவடிக்கைஎடுத்து அதனை மாலை 6மணியளவில் பெற்றுக்கொடுத்தார்.
அதேவேளை இதுவரைகாலமும் இதுவிடயத்திற்கு முட்டுக்கட்டையாகவிருந்த ஸ்ரீல.மு.கா. பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம். ஹரீஸ் மற்றும் பிரமுகர்கள் குழு பிரதமர் அலுவலகத்திற்கு வரவழைக்கப்பட்டு பேச்சுவார்த்தை நடாத்தப்பட்டு அவர்களது சம்மதமும் பெறப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
அடுத்த கட்ட நடவடிக்கையாக பிரதேச செயலக எல்லை நிர்ணயம் மிக விரைவில் மேற்கொள்ளப்பட்டு பூரண அதிகாரம் கொண்ட முழுமையான பிரதேச செயலகமாக கல்முனை வடக்கு பிரதேச செயலகம் செயல்படும் என தமிழ்தேசிய கூட்டமைப்பு நம்பிக்கை தெரிவித்துள்ளது.

இடம்பெற்ற அரசுக்கு எதிரான நம்பிக்கை இல்லா பிரேரணையின்போது கணக்காளர் நியமனம் சம்மந்தமான உத்தியோக பூர்வ கடிதம் வழங்கப்பட்டமையால் தமிழ்தேசியகூட்டமைப்பு அரசாங்கத்துக்கு சார்பாக வாக்களித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கல்முனை வடக்கு பிரதேச செயலகத்திற்கு நீதி கோரி அண்மையில் உண்ணாவிரதப்போராட்டமும் முன்னெடுக்கப்பட்டிருந்தது தெரிந்ததே.

பாரிய உண்ணாவிரதமும் நம்பிக்கையில்லாப்பிரேரணையும் சேர்ந்து பெற்றுக்கொடுத்தது ஆக இந்த கணக்காளர் நியமனந்தானா? இதற்குத்தானா இந்தளவு பந்தா? என்றுமக்கள் சிலர் சலித்துக்கொள்ளவும் தவறவில்லை.மேலும் யானைப்பசிக்கு சோளப்பொரி போட்டதுபோல இச்சம்பவத்தை பார்க்கலாம். ஒருவேளை தரமுயர்த்தல்இடம்பெற்றிருந்தால் அது நியாயம்.வெடியும் சுடலாம்.பட்டாசும் கொழுத்தலாம்.மகிழ்ச்சியும் தெரிவிக்கலாம் என்றும்கூறினர்.
எதுஎப்படியிருப்பினும் இது தரமுயர்த்தலின் முதல்படி உண்ணாவிரதத்திற்கு கிடைத்தமுதல்வெற்றி. இனிஎஞ்சிய கருமங்களை முடிக்கலாம் என சிலர் திருப்திப்பட்டதையும் காணக்கூடியதாயிருந்தது.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -