கடந்த 21/4 உயிர்த்த ஞாயிறு தினத்தில், 3 கத்தோலிக்க தேவாலயங்கள் 3 நட்சத்திர ஹோட்டல்கள் உட்பட 8 இடங்களில் நடத்தப்பட்ட தொடர் தற்கொலை குண்டுத்தாக்குதல்களின் போது பயன்படுத்தப்பட்ட வெடி பொருட்கள், வெலிசறை கடற்படை முகாமைன் கீழ் உள்ள வெடிபொருள் களஞ்சியத்தில் இருந்து சட்ட ரீதியான செயற்பாடுகளுக்காக, உரிய நடை முறைகளைப் பின்பற்றி விநியோகிக்கப்பட்டவையா என பாதுகாப்பு தரப்பு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
சி.ஐ.டி. எனப்படும் குற்றப்புலனாய்வுப் பிரிவினரும் பாதுகாப்பு அமைச்சும் இது தொடர்பில் விசாரணைகளை நடத்துவதால் அந்த விடயம் தொடர்பில் மேலதிக விபரங்களை வெளிப்படுத்துவது பொருத்தமற்றது என கடற்படை ஊடகப் பேச்சாளர் லெப்டினன் கொமாண்டர் இசுரு சூரிய பண்டார தெரிவித்தார்.
தேசிய பாதுகாப்பு ஊடக மத்திய நிலையத்தில் இன்று அவர் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் ஊடகவியலாளர்களின் கேள்விக்கு பதிலளிக்கும் போது அவர் இதனை வெளிப்படுத்தினார்.
எவ்வாறாயினும் சம்மாந்துறை மற்றும் நொச்சியாகம பகுதிகளில் பயங்கர்வாதிகளுடன் தொடர்புடையோர் என்ற சந்தேகத்தில் கைதானவர்களிடமிருந்து மீட்க்கப்பட்ட வெடி பொருட்களில், வெலிசறை முகாம் ஊடாக சட்ட ரீதியாக விநியோகிக்கப்பட்ட வெடிபொருட்கள் இருந்ததாக லெப்டினன் கொமாண்டர் இசுரு சூரிய பண்டார ஊடகங்களிடம் தெரிவித்தமையும் குறிப்பிடத்தக்கது.
வீரகேசரி
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -