எப்.முபாரக்-
கந்தளாய் பொது வைத்தியசாலையில் முஸ்லிம் பெண்களுக்கு ஏற்பட்டு வருகின்ற அசௌகரியம் தொடர்பாக கந்தளாய் பகுதியிலுள்ள பொது மக்கள் மனித உரிமை ஆணைக்குழுவில் மேற்கொண்ட முறைப்பாட்டுக்கமைய இன்றைய தினம் (13) சென்று குறித்த விடயம் தொடர்பாக ஆராய்ந்துள்ளார்கள்.பொது மக்கள் மேற்கொண்ட முறைப்பாடுகள் தொடர்பாக தெரியவருவதாவது:
கந்தளாய் பொது வைத்தியசாலையில் முஸ்லிம் பெண்கள் பல சிரமங்களை எதிர்நோக்கி வருவதாகவும்,மருந்து எடுக்க செல்கின்ற போது போது வைத்தியசாலையில் கடமை புரியும் வைத்தியர்களினால் அபாயாவை கழற்றி வரச்சொல்வது மற்றும் தலையில் அணிகின்ற சோலை கழற்றி விட்டு உள்ளே வரச்சொல்வது போன்ற நடவடிக்கைகள் நடைபெற்று வருகின்றன.
இவ்வாரான செயற்பாடுகளுக்கு கந்தளாய் வைத்தியசாலை பணிப்பாளர் கொஸ்தாவின் பணிப்பின் பேரிலே நடைபெற்று வருகின்றது.
ஒவ்வொரு நாளும் முஸ்லிம் பெண்களுக்கான மனித உரிமை மீரல்களே இடம்பெற்று வருகின்றன.
கந்தளாய் வைத்தியசாலையில் பணியாற்றும் குருணாகல் பகுதியைச் சேர்ந்த சுராஜ் என்கின்ற வைத்தியர் ஒருவரின் மோசமான செயற்பாடுகளே இப்பிரச்சினைகளுக்கு காரணமென தெரிவிக்கப்படுகின்றன.
கடந்த உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின் கந்தளாய் வைத்தியசாலையில் முஸ்லிம் பெண்கள் மத்தியில் சந்தேகத்துடனும்,கோபத்துடனும் பார்க்கின்ற நிலையே கந்தளாய் வைத்தியசாலையில் அரங்கேறி வருகின்றன.
எந்த வைத்தியசாலையிலும் இல்லாத நடைமுறைகளே வைத்தியசாலை பணிப்பாளரினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
முஸ்லிம் பெண்கள் அபாயா அணிந்து வரக்கூடாது தலைக்கு சோல் அணிந்து வரக் கூடாது போன்ற பாரிய விளம்பரங்கள் ஒப்பட்டுள்ளன.
கடந்த 2019-07-10 ஆம் திகதி புதன் கிழமை காலை 9.45மணியளவில் முஸ்லிம் பெண்ணொருவர் தனது குழந்தைக்கு மருந்து எடுக்கச் சென்று வரிசையில் நின்றுள்ளார் அப்போது தனது குழந்தை அழும் போது தனது உரப்பையிலிருந்து டொபியொன்றினை கொடுத்துள்ளார் அவ்வேளையில் பக்கத்தில் நின்ற சகோதர சிங்க பெண்மணியொருவரின் குழந்தையும் டொபி கேட்க தனதுபேக்கிலிருந்து டொபியொன்று கொடுத்துள்ளார் அப்போது அங்கு நின்றவர்கள் தவறாக பிரச்சாரம் செய்து பொலிஸ் மற்றும் நீதிமன்றம் வரையும் சென்றுள்ளது.
அதேபோன்று தான் 2019-07-11ம்திகதி வியாழக்கிழமை 9.00மணியளவில் கர்ப்பிணி பொண்ணொருவர் இரத்தம் பரிசோதனை செய்யய வைத்தியசாலைக்கு சென்ற போது அங்கு கடமையில் நின்ற சுராஜ் என்கின்ற வைத்தியர் தலையில் அணிந்ததை அகற்றுமாறு தெரிவித்து தவறான வார்த்தை பிரயோகங்களால் அப்பெண்மனியை தூற்றியதோடு,துறத்தியிருக்கின்றார்.
திருகோணமலை மாவட்டத்தில் பல வைத்தியசாலைகள் இயங்கி வருகின்ற நிலையில் கந்தளாயில் மாத்திரம் இனத்துவேச செயற்பாடுகளை வைத்தியர் தொடக்கம் சாதாரண சிற்றூழியரே வரை வெளிப்படுத்துவதை அவதானிக்க கூடியதாகவுள்ளது.
எனவே இவ்வாரான தொடர்ந்தேர்ச்சியான செயற்பாட்டை நிறுத்த வேண்டும் போன்ற விடயங்களை குறிப்பிட்டு மனித உரிமைகள் ஆணைக்குழுவில் மேற்கொண்ட முறைப்பாட்டையடுத்து அக்குழுவினர் விஜயம்.
அதனையடுத்து வைத்தியசாலையில் ஒட்டப்பட்டிருந்த அனைத்து புகைப்படங்களும் அகற்றப்பட்டுள்ளது. மேலும் சட்டத்த்துக்கு முரணாக ஒட்டப்பட்ட புகைப்படங்கள் தொடர்பாக வைத்தியசாலையின் பணிப்பாளர் கொஸ்தாவிடம் இம்மாதம் 2019/07/22 ஆம் திகதிக்கு முன்னர் தகுந்த ஒட்டப்பட்டிருந்த சுவரொட்டிகள், போஸ்டர்கள் போன்றன தொடர்பான தமது நியாயப்பாடுகளை எழுத்து மூலமாக சமர்ப்பிக் வேண்டுமெனவும் மனித உரிமை ஆணைக்குழுவினர் காரசாரமாக அவருக்கு வலியுறுத்தியுள்ளனர்.
இனியும் இவ்வாரான செயற்பாடுகள் கந்தளாய் வைத்தியசாலையில் நடைபெறாமல் தடுப்பதும் பாதுகாப்பதும் பணிப்பாளரின் பொறுப்பாகும்.

